மேலும் அறிய

Fuel Price Hike: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரிப்பு!

ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

புதுச்சேரி:  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியில் இன்று (மே 15, 2026) பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

அதன்படி, புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 2.99 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 96.26-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று உயர்ந்து ரூ. 99.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 2.92 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ. 86.47-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 89.39-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கெனவே சில நாடுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மேற்காசியாவில் போர் நிலவி வரும் நிலையில் வீட்டிலிருந்து வேலை, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்துதல் போன்ற பல வேண்டுகோள்களை அவர் விடுத்தார். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே அடுத்த 2-3 வாரங்களுக்கு இந்த போர் தொடர்ந்தால், மேலும் ஒன்று அல்லது இரண்டு எரிபொருட்களின் விலை உயர்வுகளை நாம் காணக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பொதுமக்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு எரிபொருள் விலை 100 ரூபாயை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
​
​"என் வீட்டிற்கு வந்த விஜய் என்னிடம் சொன்ன ரகசியம்!" – மேடையில் போட்டுடைத்த அன்புமணி ராமதாஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget