மேலும் அறிய

NEET Re-exam Date: ரத்து செய்யப்பட்ட நீட்.. மறுதேர்வு தேதி அறிவிப்பு.. நோட் பண்ணுங்க!

2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இதனை 22.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஆனால் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடந்த நிலையில் அதில் மோசடி நடைபெற்றதாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மறுதேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இதனை 22.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். 9.47 லட்சம் ஆண்கள் மற்றும் 13.33 லட்சம் பெண்கள் என இந்த நீட் தேர்வை விண்ணப்பித்து பல இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று கஷ்டப்பட்டு தேர்வு எழுதினர்.  13 மொழிகளில், 552 நகரங்களில் உள்ள 5,500 தேர்வு மையங்களில் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான 2 லட்சம் இடங்கள் இருக்கும் நிலையில் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஆனால் 2026ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது . வினாத்தாள் கசிவு தவறை கண்டறிந்த தேசிய தேர்வு முகமை நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மாணவர்கள் அளித்த கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்தது. மேலும் புதிதாக எழுதப்போகும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது மாணவர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த முடிவுக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியது. 

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு பதிலாக மறுதேர்வு நடக்கும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள தகவலில், மத்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் 2026 மறுதேர்வை வரும் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.எனவே தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேர்வு நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மே 7ம் தேதி நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்ட புகார்களை தேசிய தேர்வு முகமை பெற்றது. அவை சரிபார்க்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் வினாத்தாள் ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் கசிந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டதால் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Embed widget