மேலும் அறிய

சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்

அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி இன்று முக்கிய முடிவெடுக்கவுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் தூக்கியடித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக, அந்த வகையில் திமுக 73 இடங்களில் வெற்றி பெற்று 2 வது இடத்திலும், 53 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி 3வது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது தவெக.

இந்த நிலையில் திடீரென அதிமுகவில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியானது உருவானது. 25 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தனி அணியாக செயல்பட தொடங்கினர். அடுத்தாக தவெகவிற்கு ஆதரவும் வெளிப்படையாக கூறினார்கள். இதுமட்டுமில்லாமல் தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணியை ஒரு அணியும் நியமிக்க கோரி கடிதம் கொடுத்தது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெட்ட வெளிச்சமானது. இதற்கு மத்தியில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டார். 

ஆனால் தவெகவிற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக சட்டசபையில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அடுத்தாக ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்த நிலையில், தவெகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 25 எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு சபநாயகரிடம் கடிதம் கொடுத்தது.
அடுத்தாக தனி அணியாக செயல்பட்ட எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 மாவட்ட செயலாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டது. இதுமட்டுமில்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தரப்பு அடுத்தாக என்ன செய்யலாம் என நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தியது. இதில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு விடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது ஆதரவை காட்ட காய் நகர்த்தி வருகிறார். மேலும் சபாநாயகர் 25 எம்எல்ஏக்களின் பதவிகளை நீக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவும் இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.  இரு தரப்பும் மாறி மாறி மோதிக்கொள்ளும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகள் வீடியோக்கள்

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget