மேலும் அறிய

உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ

தன்னை பிடிக்காதவர்கள் உளவாளி வைத்து தனது கடந்த காலத்தைப் பற்றி விசாரித்து வருவதாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை பாடகி கெனிஷா சந்தித்து வருகிறார். அண்மையில் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி குறித்து அவதூறான கருத்துக்கள் பகிரப்பட்டன. மேலும் அர்த்தி குறித்து கெனிஷா கருத்து தெரிவிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் பொய் என்றும் தனக்கு அப்படி எந்த ஒரு உத்தரவும் வரவில்லை என்றும்  கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கெனிஷாவின் வேதனை நிறைந்த கடந்த காலம் 

" என் பெற்றோர்களுக்கு நான் ஒரே குழந்தை . என் அம்மா 2013 ஆம் ஆண்டு இறந்தார். என் தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார். என்னுடைய 4 வயதில் இருந்து என் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. என் கணவருடம் 10 பெண்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு உறவில் இருந்தார்கள். இந்த நபருடன் நான் வெறும் 4 மாதங்கள் மட்டுமே திருமண உறவில் இருந்தேன். இந்த நபர் என்னை செய்த கொடுமையில் என் பனிக்குடம் உடைந்து என்  வயிற்றில் இருந்த குழந்தை வெளியே வந்தது. இதை எல்லாம் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளில் நான் சுயமாக என் சொந்த காலில் நின்றேன். ஆமான் நான் 500 ரூபாய் சம்பளத்திற்காக தான் என் பயணத்தை தொடங்கினேன். இன்று நான் பெரிய சம்பளத்திற்கு இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு வந்திருக்கிறேன். இந்த வளர்ச்சியை அடைவதற்காக நான் சமரசங்கள் செய்தேன் என யாரும் என்னை குறை சொல்ல முடியாது.

உளவாளி வைத்து கண்காணிக்கிறார்கள் 

ஆனால் சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் என்னை பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். ஆனால் ஒருவர் எதுவும் பேசவில்லை என்பதற்காக நீங்கள் என்ன வேண்டுமானால் பேசுவீர்களா. ஆனால் கடந்த சில மாதங்களில் என்னை எல்லாரும் தாக்குகிறார்கள். என்னை தாக்குபவர்கள் பெங்களூருவிற்கு டிடெக்டிவ் அனுப்பி என்னுடைய கடந்த காலத்தை விசாரிக்கிறார்கள். எனக்கு யாருடன் திருமணம் ஆனது என்பதை அவர்கள் விசாரிக்கிறார்கள். என் தந்தையை நான் ஹோமில் சேர்த்திருப்பதாக தகவல் பரப்புகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னைச் சுற்றி இருந்த விமர்சனங்கள் காரணமாக நான் எந்த நிகழ்ச்சியிலும் நான் பாடவில்லை. இப்படியான சூழலில் தான் நான் கேரளாவில் மீன்குளத்தி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். 8000 பேர் அந்த நிகழ்வில் என்னுடன் இணைந்து பாடினார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keneeshaa (@keneeshaa1)

ஆர்த்திக்கு எதிராக பேச தடை உத்தவு வரவில்லை

இது நடந்த அடுத்த நாள் என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதை யார் ஹேக் செய்தது என்பதை நானும் என்னுடைய டீமும் இணைந்து கண்டுபிடித்துள்ளோம். ஆனால் அடுத்த நாளே நான் ஆர்த்திக்கு எதிராக பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிடத் தொடங்கின. அப்படியான ஒரு உத்தரவே எனக்கு வரவில்லை. இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து வருகின்றன. ஒரு அழகனான நபர் நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். மக்கள் எண்ணெய் தட்டுப்பாட்டால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதை எல்லாம் கடந்து ஒருவர் தன்னுடைய தாழ்வுமனப்பான்மை காரணமாக தன்னைப் பற்றி எல்லாரும் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சனையை தனது குடும்பத்திடமோ , சினிமாவைச் சேர்ந்த நண்பர்களிடமோ சொல்ல முடியாமல் என்னை மாதிரியான ஒரு பெண்ணிடம் வந்து சொன்னார் என்றால் என் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் எங்கள் இடையில் இருக்கும் அழகான நட்பை நான் ஏன் முடித்துக் கொள்ள வேண்டும் . உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் ஏன் உங்களுடன் சேர்த்து மற்றவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து கீழே இழுக்கிறீர்கள். மீடியா வெளியிட்டது போல் எனக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. " என கெனிஷா பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Embed widget