![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
போட்டியாளர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய ப்ரியங்கா
சூப்பர் சிங்கர் ஜூனியரில் ப்ரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
![போட்டியாளர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய ப்ரியங்கா Priyanka deshpande in super singer junior show போட்டியாளர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய ப்ரியங்கா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/7f2488b3c166eb2a5c00fb3c3ecb4e03_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளர்கள் தமிழ்நாடு அளவில் பிரபலமாவது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோ.
அதேபோல், கோபிநாத், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் மக்கள் மனதை கவர்ந்த விஜய் டிவியின் தொகுப்பாளர்கள். அந்தவகையில் ப்ரியங்காவும் ஒருவர். ப்ரியங்கா விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
View this post on Instagram
பிக்பாஸில் இரண்டாவது இடம் பிடித்தார். இதனையடுத்து அவர் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாகவும் இருந்துவருகிறார்.
❤️❤️❤️❤️ சூப்பர் சிங்கர் ஜூனியர் - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில. #SuperSingerJunior #SuperSingerJuniorSeason8 #SSJ #VijayTelevision pic.twitter.com/gVoHBnsyzD
— Vijay Television (@vijaytelevision) February 4, 2022
பிக்பாஸுக்கு பிறகு பிரியங்கா தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். இந்நிலையில், பிரியங்கா “சூப்பர் சிங்கர் ஜூனியர் 8” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது ஆறாம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் ப்ரியங்காவை கண்டதும் போட்டியாளர்கள் பலர் கண் கலங்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. முன்னதாக, ப்ரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)