Priyanka Chopra: ‛நான் என் தோல்விகளை எண்ணி முடங்கிவிடுபவள் அல்ல’ -பிரியங்கா சோப்ரா!
பிரியங்கா சோப்ரா சமிபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் "நான் தோல்வியை பார்த்து பயந்து அதிலேயே தங்கி விடுபவள் அல்ல" என தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரபல சேனலின் நேர்காணலில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். "நான் தோல்வியை பார்த்து பயந்து அதிலேயே தங்கி விடுபவள் அல்ல" மற்றும் எனக்கு தற்போது 40 வயது ஆகிறது நான் என் வாழ்க்கையில் நிறைய தோல்விகள் மற்றும் வெற்றிகளை பார்த்தேன் ஆனால் எனது இருபதுகளில் நான் தோல்வியை கண்டு பயந்து ஓடினேன். ஆனால் தற்போது ஒரு தோல்வியை சந்தித்தால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று நான் மிகவும் நன்றாக கற்றுக் கொண்டு விட்டேன் அது என் ரசிகர்களுக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து,
நான் ஹாலிவுட்டில் தடம் பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது தான் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை செய்கிறேன். பிரியங்கா சோப்ரா பிரபல சீரிஸ் குவான்டிகோ சீரிஸில் நடித்து இருந்தார். மேலும் பேவாட்ச்சில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.
அது குறித்து அவர் கூறுகையில், தென்னிந்திய நடிகைகள் ஹாலிவுட் வாய்ப்புக்காக மிகவும் போராட வேண்டி உள்ளது. பெரிய கமர்சியல் படங்களில் முன்னணி கதாபாத்திரத்திற்காக நாம் நிறைய உழைப்பு போட வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தான் எப்போதுமே ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் ஒரு பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நிறைய பெரிய ஆளுமைகளுடன் எல்லாம் நான் நடித்துவிட்டேன். அதேபோல் ஹாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.. மேலும் பிரியங்கா ரஷோ பிரதர்ஸ்ஸின் அடுத்த சீரிஸ் சிடாடெலில் நடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் ஜீ லீ ஜாரா படத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
View this post on Instagram
திரைப்படத்தில் தென்னிந்திய நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக சமந்தா தற்காப்பு கலைகள் பெற்றுக் கொண்டே இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகிறது.