Priya Anand Emotional Interview: "புனித் ராஜ்குமார் இறந்திருக்கக்கூடாது" - நேர்காணலில் தேம்பி அழுத பிரியா ஆனந்த்..!
மறைந்த நடிகர் புனித்குமாரை பற்றி பேசும் போது உடைந்து அழுதார்.
புனித் ராஜ்குமார் குறித்து பிரியா பேசும்போது, “அவர் பெரிய சூப்பர் ஸ்டார் .... (அழுகிறார்). அவர் இல்லாதது பெரிய இழப்பு. சிலர் ஸ்கிரீனில் ஒரு மாதிரி இருபபார்கள். ரியல் லைஃபில் வேறு மாதிரி இருப்பார்கள். ஆனால் அவர் ரியல் லைஃப் ஹீரோ. அவர் இறந்த பிறகுதான் அவர் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.
View this post on Instagram
அவரோட இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். அவரை சந்தித்த யாரும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது. நாம் பேசும் போது நம்மைத்தான் அவர் கவனிப்பார். போனை பார்க்கமாட்டார். கன்னட சினிமா எனக்கு மிகவும் பிடித்த துறை. கன்னட மொழியை எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதுமட்டுமன்றி நிறைய விஷயங்களை அவர் எனக்காக செய்திருக்கிறார்.அதெல்லாம் அவர் செய்ய வேண்டிய தேவையில்லை. புனித்குமார் இறந்திருக்க கூடாது. இந்தப்படத்தை அவரது ரசிகர்கள் பலமுறை பார்ப்பார்கள்.” என்று பேசினார்.
முன்னதாக, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.அவரது இறப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது கடைசி படமான ஜேம்ஸ் திரைப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சீக்ரெட் ஏஜெண்டாக புனித்குமார் நடித்திருக்கும் இந்தப்படத்தில் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் புனித்தின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். சேத்தன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தை கிஷோர் பதிகொண்டா தயாரித்துள்ளார். புனித்தின் மூத்த சகோதரர் சிவராஜ்குமார் தனது தம்பிக்காக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வில்தான் பிரியா ஆனந்த் கண்கலங்கினார்.