Aadu Jeevitham: உலகம் முழுவதும் 1724 தியேட்டர்கள்! வசூல் மழையில் நனையும் ஆடுஜீவிதம்!
பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆடு ஜீவிதம்
பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியாகியது. பிருத்விராஜ் சுகுமாரன் , அமலா பால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பெயமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நாள் வசூல்
ஆடு ஜீவிதம் படம் உலகளவில் முதல் நாளில் மொத்தம் 16.7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. விடுமுறை அல்லாத நாளில் வெளியாகியும் படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பை காட்டுகிறது, இனி வரவிருக்கும் விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Delighted by the overwhelming response to #TheGoatLife at the box office!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 29, 2024
Keep the love pouring! #Aadujeevitham #TheGoatLife #TheGoatLifeInCinema@DirectorBlessy @benyamin_bh @arrahman @Amala_ams @Haitianhero @rikaby @resulp @iamkrgokul @HombaleFilms @AAFilmsIndia… pic.twitter.com/bQi4VXzm52
இந்தியாவில் முதல் நாளில் 7.6 கோடிகளை இப்படம் வசூல் செய்தது. இரண்டாவது நாளாக 6.25 கோடி வசூல் செய்த ஆடு ஜீவிதம் இரண்டு நாட்களில் இந்தியளவில் 13 கோடிகள் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
16 ஆண்டுகால காத்திருப்பு
கடந்த 2008 ஆம் ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் பிளெஸி அறிவித்தார். இந்தப் படத்தின் காட்சிகளை நிஜ பாலைவனத்திற்கு சென்று படமாக்க வேண்டும் என்று இயக்குநர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய சூழலில் மலையாள சினிமாவின் பொருளாதார நிலையால் இந்தப் படத்தை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தன என்றும் இந்தப் படத்தை தாங்கள் நினைத்தபடி எடுப்பதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதாகவும் நடிகர் பிருத்விராஜ் கூறியிருந்தார். 16 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க : Rajinikanth: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்: என்ன சொன்னாரு?