Good Day Movie Review : குட் டே திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் என் அரவிந்தம் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடித்துள்ள குட் டே படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

குட் டே திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் என் அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடித்துள்ள படம் குட் டே. காளி வெங்கட் , மைனா நந்தினி , ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் , விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நியூ மாங்க் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். குட் டே படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
திருப்பூரில் பனியன் கம்பேனியில் வேலை செய்யும் நாயகனைச் சுற்றி நடக்கும் கதையே குட் டே. நாயகனாக பிருதிவிராஜ் சிவலிங்கம் தன்னுடன் வேலை செய்யும் பெண்ணிற்கு பாலியல் தொலை கொடுக்கும் மேனேஜரை கண்டிப்பதால் பணியிடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இதனால் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார். குடித்துவிட்டு தனது முன்னாள் காதலி வீட்டிற்கு செல்லும்போது பிரச்சனையில் சிக்கி போலீஸில் மாட்டிக்கொள்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அதே நேரம் ஒரு குழந்தை காணாமல் போன விசாரணை நடைபெற்று வருகிறது. போலிஸிடம் இருந்து பிருத்விராஜ் தப்பினாரா , காணாமல் போன குழந்தை மீட்கப்பட்டதா என்பதே படத்தின் கதை
தன்னைச் சுற்றி இருக்கும் சூழலாலும் குடிப்பழக்கத்தாலும் ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை காட்டுகிறது குட் டே படம். படத்தின் மிகப்பெரிய பலமான பிரித்விராஜ் சிவலிங்கத்தின் நடிப்பு உள்ளது. குடிப்பழக்கமுடைய ஒரு நபரின் உடல் மொழியை தத்ரூபமாக நடித்து காட்டியுள்ளார். அதே நேரம் படம் முழுவதும் கதாபாத்திரத்தின் மீட்டரை விட்டு நழுவாமல் நடித்திருப்பது சிறப்பு. மைனா நந்தியின் நடிப்பும் கவனமீர்க்கிறது.
இயக்குநர் அரவிந்தன் ஒரு காயப்பட்ட ஒரு மனிதனின் உளவியலை மிக அழகாக தனது எழுத்தில் பிரதிபலித்திருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு உயிருட்டுகின்றன. ஒரு சில இடங்களில் கதையை விட்டு நழுவும் திரைக்கதையைத் தவிர்த்து குட் டே திரைப்படம் ஒரு சிறப்பான முயற்சி





















