800 திரையரங்கில் வெளியான கேப்டன் பிரபாகரன்...கண்ணீர் சிந்தியபடி பார்த்த விஜயகாந்த் குடும்பம்
இயக்குநர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகியுள்ளது

கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்
1991 ஆம் ஆண்டில் விஜயகாந்தின் 100 ஆவது படமாக உருவானது கேப்டன் பிரபாகரன் . இப்படத்தில் மன்சூர் அலிகான் , சரத்குமார் , ரூபினி , லிவிங்ஸ்டன் , ஆகியோரும் நடித்திருந்தார்கள். விஜய்காந்த் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான கேப்டன் பிரபாகரன் திரையரங்குகளில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி பிரம்மாண்ட வெற்றிபெற்றது. விஜய்காந்தின் மறைவுக்குப் பின் திரைப்படங்களில் அவரை பல விதங்களில் இயக்குநர்கள் நினைவுகூறுகிறார்கள்.
விஜயின் தி கோட் படத்தில் ஏ.ஐ மூலம் விஜயகாந்தை திரையில் தோன்ற வைத்தனர். அதேபோல் அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்தில் விஜய்காந்தின் பொட்டு வச்ச பாடல் இடம்பெற்று பெரியளவில் கவனம்பெற்றது. விஜய்காந்தின் மகன் சன்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் படத்திலும் ஏஐ மூலம் விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டன. இப்படியான நிலையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி 800க்கு மேற்பட்ட திரைகளில் சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது
800+ shows, endless celebrations! 🎬🔥 “Captain Prabhakaran” storms back into theatres for a grand birthday fest. Witness the legend, the action, and the unstoppable spirit—now screening across Tamil Nadu! #CaptainPrabhakaran #LegendReturns #TamilCinema pic.twitter.com/f4OlkKyLHm
— Sparrow Cinemas (@Sparrowcinemas) August 22, 2025
எமோஷ்னலான பிரேமலதா விஜயகாந்த்
கேப்ரம் பிரபாகரன் படத்தை ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரீரிலீஸ் செய்துள்ளார். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய் பிரபாகரன் ஆகிய இருவரும் கேப்டன் பிரபாகரன் நெவேலியில் படத்தை திரையரங்கில் பார்த்தனர். விஜயாகந்தை திரையில் பார்த்த பிரேமலதா தேம்பி தேம்பி அழுதபடி படத்தை பார்த்தார். அருகில் இருந்த மகன் விஜய் பிரபாகரனும் தனது தந்தையை ஆன்ஸ்கிரினில் பார்த்து எமோஷனலாகி கண் கலங்கினார்.
கேப்டனை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா.. 'கேப்டன் பிரபாகரன்' ரீ-ரிலீஸில் நெகிழ்ச்சி#DMDK #CaptainPrabhakaran #Vijayakanth #PremalathaVijayakanth #Premalatha #abpnadu pic.twitter.com/IVebhyZlSD
— ABP Nadu (@abpnadu) August 22, 2025





















