சமூக வலைதளங்களில் அதிக நேரம் Scroll செய்பரா? இதைப் படிங்க!
ஸ்மாட்ஃபோன் மூலம் எல்லாம் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறது. அப்படியிருக்கையில், அதிகம் நேரம் சமூக வலைதளங்களில் செலவிடுவது மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
வேலை செய்ய வேண்டிய நேரத்தில் 'யூடியூப்பிலும்', பேஸ்புக்கிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக் கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலை, பேஸ்புக் மெசஞ்சரை திறந்து விடுகிறோம்.
ஒரே ஒரு ரீல்ஸ் என 2 மணிநேரத்துக்கு மேல் ரீல்ஸ் பார்க்கிறோம்..
மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.
சற்று சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது. அதிக நேரம் செல்ஃபோனில் செலவிடுவதை சாத்தியம் ஆக்கலாம்.
சாப்பிடும்போது, தூங்குவதற்கு முன்பு செல்ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
காலையில் எழுந்ததும் செல்ஃபோன், இன்டர்நெட் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சில திட்டங்களை பழக்கப்படுத்தினால் எதையும் சாதிக்க முடியும். அப்படியே, ஸ்க்ரீன் காண்பதை தவிர்க்கலாம்.