மேலும் அறிய

Prabhas: திருமண செய்தியை அறிவித்த பிரபாஸ்? இன்ஸ்டாவில் பதிவு.. வாழ்த்தும் ரசிகர்கள்!

நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணம் பற்றிய மறைமுகத் தகவலை வெளியிட்டுள்ளார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ்

பான் இந்திய நடிகர் பிரபாஸ் (Prabhas) அடுத்தடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். ராதே ஷியாம், ஆதிபுருஷ் போன்ற அடுத்தடுத்த தோல்விப் படங்களுக்குப் பின் கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படம் ஓரளவுக்கு அவருக்கு கைகொடுத்தது என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து  நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் படம் கல்கி 2898.

இப்படத்தில் முக்கிய ரோலில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படூகோன், ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தைப் பிரபாஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றுமொரு கூடுதம் மகிழ்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

 திருமணத் தகவலை அறிவித்த பிரபாஸ்

44 வயதை எட்டியிருக்கும் பிரபாஸ் இதுவரை சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்படி  அமைந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபாஸ் “டார்லிங்க்ஸ் கடைசியாக ஸ்பெஷலான ஒரு நபர் எங்கள் வாழ்க்கையில் வர இருக்கிறார். காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் பிரபாஸ் தனது திருமணத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களும், நெட்டிசன்களும் தெரிவித்து வருகின்றன. பிரபாஸின் ஒரே ஒரு குட்டிப் பதிவில் தற்போது ஒட்டுமொத்த இணையதளமும் ஆரவாரம் செய்து வருகிறது.  பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளும் அந்த ஸ்பெஷலான நபர் யாரென்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றாலும், இன்னும் சில நாட்களில் பிரபாஸ் தனது வாழ்க்கைத் துணையை பிரபாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்பிரிட்

கல்கி  படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். ஹாரர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.  சுமார்  ரூ.250 கோடிகள் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு படம் ‘தி ராஜா சாப்’. மாருதி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ராஜா சாப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்கெனவே பெற்றுள்ளது.

மேலும் படிக்க : Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா? - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget