PS 1 Second Single:பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி... புதிய அப்டேட்!
PS 1 Second Single : ஆகஸ்ட் மாதத்தில் வரும் 18 அல்லது 19 ஆம் தேதியில் இரண்டாவது பாடல் வெளியாகலாம் என தகவல் வெளியாகிவுள்ளது
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சியில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகிவுள்ளது.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. இப்பாடலில் வந்தியத்தேவனாகிய கார்த்தி பொன்னி நதியை கடந்து செல்வது போல் சில காட்சிகள் இடம்பெற்றன. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் சில நாட்களுக்கு ரசிகர்களின் நாவில் ஒலித்து கொண்டிருக்க போவது உறுதி.
View this post on Instagram
பொன்னி நதி ரிலீஸ் பிறகு, படக்குழுவினரிடம் இருந்து பொன்னி நதி படப்பிடிப்பு வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் பற்றி தகவல் வந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வரும் 18 அல்லது 19 ஆம் தேதியில் இரண்டாவது பாடல் வெளியாகலாம் என்றும் படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சியில் ரிலீஸாகும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.
Second single from #ManiRatnam's #PS1 to be Aditya Karikalan's war victory celebration song. Will release at an event in Hyderabad on August 18/19. #PonniyinSelvan1 #PonniyinSelvan #ARRahman #ChiyaanVikram #adityakarikalan
— Kaushik Rajaraman (@iamkaushikr) August 6, 2022
இப்பாடல் ஆதித்த கரிகாலன் போரில் வெற்றி அடைந்ததை அடுத்து நடைபெறும் கொண்டாடப் பாடலாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்த கரிகாலன் சுந்தர சோழனின் முதல் மகன், அருண்மொழிவர்மன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர் ஆவார். ஆதித்த கரிகாலனை வட திசை மாதண்ட நாயகர் என்று நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் டீசரில் மதில் சுவரை உடைத்து யானையில் ஆதித்த கரிகாலன் வரும் காட்சியை சியானின் ஃபேன்ஸ் ரசித்தனர்.
அதற்கு முன்பாக படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கில் ஆதித்த கரிகாலனை ஆதித்ய கரிகாலன் என தவறாக டிசைன் செய்து வெளியிட்டு இருந்தனர். இதைப்பார்த்த பல பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் செம கடுப்பாகி இணையத்தில் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடதக்கது.