PS1 Latest update: "பொன்னியின் செல்வன்" ரன்னிங் டைம் என்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. முதல் பாகத்தின் கால அளவு 2 மணிநேரம் 47 நிமிடங்கள் ( 167 நிமிடங்கள் ) என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகம் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் ஆகும். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. மேலும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான ரன்னிங் டைம் ( படத்தின் நீளம்) தற்போது வெளியாகியுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார். அவரின் நீண்ட நாள் கனவான இந்த படத்தினை நடிகர் இளங்கோ குமரவேலன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருடன் இணைந்து திரைப்பட வடிவத்திற்கு எழுதியுள்ளனர். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு மற்றும் பலர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் சமீபத்தில் நடைபெற்றது.
#PonniyinSelvan - HYDERABAD Pre Release Event Happening Now ❣️🔥#ChiyaanVikram #Karthi #JayamRavi #AishwaryaRaiBachchan #Trisha #ARRahman #PS1FromSep30th pic.twitter.com/NsFCL5Wcvz
— VCD (@VCDtweets) September 23, 2022
ஹைதராபாத் சென்றுள்ள PS டீம்:
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் பாகம் உலகெங்கிலும் ஐந்து மொழிகளில் வெளியாக தயாராக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் படத்தின் விளம்பர பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று பெங்களூரில் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று ஹைதராபாத் சென்றுள்ளனர்.
#PonniyinSelvan censored 'UA' with the Runtime of 167 mins (2hrs 47mins)💥
— AmuthaBharathi (@CinemaWithAB) September 23, 2022
Perfect duration👌pic.twitter.com/xxVwdaVFPA
யு/ஏ சான்றிதழ் கிடைச்சாச்சு:
அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. மேலும் ஒரு சந்தோஷமான தகவல் என்னவென்றால் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2 மணிநேரம் 47 நிமிடங்கள் (167 நிமிடங்கள்) என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிகவும் அதிகமாகவும் இல்லாமல் சுருக்கமாகவும் இல்லாமல் சரியான கால அளவில் படம் வெளியாக உள்ளது என்பது கூடுதல் சந்தோஷம். மணி சார் என்றுமே எதிலுமே பர்ஃபெக்ட் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.