Ponniyin selvan Part 1: ‛மரைக்காயர் படம் மாதிரி இருக்கு..’ பொன்னியின் செல்வன் ‛கேரள ரிவியூ’ இதோ!
பாகுபலி அளவுக்கு இல்லை.. இது மோகன் லாலின் மறைக்காயர் படம் போல் உள்ளது.. படத்தை பார்த்த மலையாள ஆடியன்ஸ்களின் விமர்சனம் இதோ!
5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை, இரண்டு பாகங்களாக எடுத்த மணிரத்தினம், இப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட்டிருக்கிறார்.
View this post on Instagram
உலகமெங்கும் வெளியான இப்படமானது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மலையாள மொழியில் இப்படத்தை கண்ட ரசிகர்கள், இப்படத்தின் முதல் கட்டம் நன்றாகவுள்ளது, கார்த்தி மற்றும் விக்ரம் சூப்பராக நடித்துள்ளனர் என்றும், மலையாள வரலாற்று படமான மரைக்காயர் படம் போல் இருக்கிறது என்றும் மூன்று மணி நேரப் படமாக இருந்தாலும் படத்தில் எந்தத் தொய்வும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
சிலர் இப்படி நல்ல விமர்சனங்களை கொடுத்தாலும் பாகுபலி போல் இப்படம் இல்லை, பிரமாண்டம் குறைகிறது என்றும் கூறியுள்ளனர். இப்படத்தை, மலையாளத்தில் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர், நாவலை நிச்சயமாக படித்திருக்க வாய்ப்பில்லை, கேரளா என்பதால் தமிழ் கலாச்சாரத்தை கொஞ்சம் தெரிந்து இருக்க வாய்ப்புள்ளது. அதனால் இவர்கள் படத்தை வெறும் படமாக பார்த்துள்ளார்கள் என்று சொல்லலாம். இது கூட பரவாயில்லை, இப்படத்தை ஹிந்தி ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால், அவர்களுக்கு இக்கதையும், தென்னிந்திய கலாச்சாரத்தை பற்றி எதுவும் தெரிய வாய்பில்லை.
View this post on Instagram
திருவனந்தபுரம் வரை சென்று படக்குழுவினர்கள் ப்ரோமொஷன் செய்தனர். இவர்கள் இவ்வளவு மெனகெடல் செய்ததற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றனர். இவர்களின் உழைப்பு வீண் போகவில்லை என்றே சொல்லலாம். ப்ரொமோஷனுக்காக கேரளா சென்ற விக்ரம், ஆதித்த கரிகாலனாகவே மாறி செண்ட மேளம் வாசிக்கத் தொடங்கினார். அந்த வீடியோவும் அந்த சமயத்தில் வைரல் ஆனது. வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தி, சூர்யா பெயரை சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. அதுபோல், நடிகை த்ரிஷா அழகாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Ponniyin Selvan 1 Review: பொன்னி நதி பார்க்கலாமா? பொன்னியின் செல்வன் போகலாமா? நச் நச் விமர்சனம்!
பொன்னியின் செல்வன் முதல் பாகம்... புத்தகத்தின் எத்தனை பாகத்தை கடந்திருக்கிறது?