மேலும் அறிய

Ponniyin Selvan 2 Box Office: முதல் பாகத்தை விட கம்மியா? அதிகமா? பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் அப்டேட்..

முதல் நாள் முடிவில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட 25 சதவீதம் குறைவான வசூலையே இந்த பாகம் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் நாள் சுமார் 25 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2 வசூல்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்.28) உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் பலகட்ட முயற்சிகளுக்குப் பின் உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ரஹ்மான், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  

 லைகா நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சென்ற ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரிசையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

இந்திய வசூல் நிலவரம்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. 

இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களைப் பகிரும் Sacnilk தளத்தின்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 25.45 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழ் பதிப்பில் 18.97 கோடிகளும், இந்தி பதிப்பில் 1.7 கோடிகளும், மலையாள பதிப்பில் 1.35 கோடிகளும், தெலுங்கு பதிப்பில் 3.4 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 3200 திரைகளுக்கும் மேல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதல் நாள் முடிவில், முதல் பாகத்தை விட 25 சதவீதம் குறைவான வசூலையே இந்த பாகம் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இன்றும் நாளையும் வார விடுமுறை நாள்கள் என்பதால் வசூல் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலவையான விமர்சனங்கள்

சர்வதேச வசூல் நிலவரம் குறித்தும் இதுவரை தகவல்கள் வெளிவராத நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன் நிறுவனமும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை பகிரவில்லை. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மேலும் 25 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் காட்சி முடிவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பறந்த நிலையில், அதன் பின் கலவையான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. திரைக்கதைக்காக நாவலில் இல்லாத காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் வாசகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget