Baakiyalakshmi: வசனத்தால் வந்த வினை! பாக்கியலட்சுமி சீரியல் மீது போலீஸ் புகார்! புது சிக்கல்!!
டிவியில் ஹிட்டடிக்கும் இந்த சீரியல் சோஷியல் மீடியாவிலும் ஹிட் அடித்துவருகிறது. கோபியைச் சுற்றி மீம்ஸ்கள் பறக்கின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகள் என சென்றுகொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில்,. கணவன் எடுக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவுள்ளது.
View this post on Instagram
காத்து வாக்குல ரெண்டு காதல் என்பது போல ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் திருமணத்தை மீறிய உறவு என கோபி கேம் ஆடிக்கொண்டு இருக்கிறார். விவாகரத்துக்கான வேலைகளும் மனைவிக்கே தெரியாமல் படு பயங்கரமாக போய்கொண்டிருக்கிறது. டிவியில் ஹிட்டடிக்கும் இந்த சீரியல் சோஷியல் மீடியாவிலும் ஹிட் அடித்துவருகிறது. கோபியைச் சுற்றி மீம்ஸ்கள் பறக்கின்றன.
View this post on Instagram
புகார்..
இந்த நிலையில் பாக்கியலட்சுமியில் வந்த ஒரு காட்சியால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. பாக்கியலட்சுமியின் மாமனார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க ஒரு பிசியோதெரபிஸ்ட் வருகிறார். அவர் மீது பாக்யாவின் மகள் இனியா கொள்கிறார். இதனை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் பிசியோதெரப்பிஸ்டையும் அவரது தொழிலையும்தவறாக பேசுவதாக அந்தக் காட்சி உள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதனையடுத்து, இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்