Pathu Thala First Single: நாளைக்கு சொல்றோம்... அப்டேட் வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு..கடுப்பான ரசிகர்கள்..!
பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் “பத்து தல” படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என நாளை சொல்லப்படும் என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வெளியானது. இதனையடுத்து, கடந்தாண்டு ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்த மஹா படத்தில் சிறப்பு தோற்றத்திலும், இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் சிம்பு நடித்திருந்தார்.
View this post on Instagram
செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிம்புவுக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்த படங்களை அடுத்து அவர் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
You asked and we've heard you! Gear up for the #PathuThalaFirstSingle announcement arriving tomorrow @ 5.04PM! ❤🔥#PathuThala #Atman #SilambarasanTR #AGR #PathuThalaFromMarch30
— Studio Green (@StudioGreen2) January 30, 2023
Starring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar
An @arrahman Musical pic.twitter.com/MwZy4osgNZ
ஏற்கனவே இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்த நிலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதனிடையே சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வண்ணம், நாளை மாலை 5.04 மணிக்கு முதல் பாடல் எப்போது வெளியாகும் என தெரிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் “இதற்கு ஒரேடியாக நாளையே சொல்லிருக்கலாமே” என கலாய்த்து வருகின்றனர்.