பார்த்திபன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைந்தது ஏன் தெரியுமா? ஒரு போட்டோ சொன்ன ப்ளாஷ்பேக்!
Parthiban- A. R. Rahman: 20 ஆண்டுகளுக்கு முன்னர் "ஏலேலோ" திரைப்படத்தின் பூஜையை நடத்தினர் பார்த்திபன். சில காரணங்களால் அவரின் அந்த படம் நிறுத்தப்பட ,அப்படத்திற்கு இசையமைக்க இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
Director Parthiben: மீண்டும் வருமா ஏலேலோ...பார்த்திபனுக்கு கோரிக்கை...ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இயக்குனர், நடிகர் பார்த்திபன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் "ஏலேலோ" எனும் திரைப்படத்தின் பூஜை விழாவை நடத்தினர். ஏதோ சில காரணங்களால் அவரின் அந்த படம் நிறுத்தப்பட்டது. முதல் முறையாக இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் - இயக்குனர் பார்த்திபன் கூட்டணியில் உருவாக இருந்தது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முற்போக்கு இயக்குனர் :
தமிழ் சினிமாவின் ஒரு முற்போக்கு சிந்தனையுடைய ஒரு வித்யாசமான இயக்குனர் பார்த்திபன். அவரின் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமூகம் சார்ந்த கருத்தினை மக்களுக்கு போய் சேரும் வகையில் மிகவும் வித்தியாசமாக எளிமையாக எடுக்கும் திறமை படைத்தவர். அது அவருடைய ஸ்டைல் என்பது திரையுலகத்தினர் அனைவரும் அறிந்ததே. இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இன்றும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் பார்த்திபன். இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிப்பிலும் அவர் ஒரு தனித்துவமானவர். 90'ஸ்களில் ஒரு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்தவர் பார்த்திபன்.
இரண்டு தேசிய விருதுகள் பெற்ற "ஒத்த செருப்பு: :
2019ம் ஆண்டு பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றது. அவர் மட்டுமே தனி கதாபாத்திரமாக நடித்த இப்படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும், இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டிற்கான இரண்டு தேசிய விருதுகளை தட்டி சென்றது.
வெளிவராத படங்கள்:
இயக்குனர் பார்த்திபன் பல கதைகளை எழுகி பல படங்களுக்கு பூஜையும் போட்டுள்ளார். ஒரு சமயத்தில் அதிகமாக படத்திற்கு பூஜை போட்ட இயக்குனர் இவராகத் தான் இருப்பார். இயக்குனராக கொடி கட்டிப் பறந்த இயக்குனர் பார்த்திபனின் சில படங்கள் ஏதோ சில காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டன. சீமா பசு, சோத்துக்கட்சி, காங்கேயம் காளை, ஏலேலோ உள்ளிட்ட படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள். அதற்கான கரணம் தெரியவில்லை.
எனது பொக்கிஷத்திலிருந்து...@ikamalhaasan pic.twitter.com/gpzz48FKLQ
— Sundaresan (@Haidasundar) August 9, 2022
ஏலேலோ திரைப்படம்:
இயக்குனர் பார்த்திபனின் கனவு திரைப்படமான ஏலேலோ ஒரு கிராமத்து திரைப்படமாக தயாரிக்கப்பட இருந்தது. அதற்காக ஒரு பெரிய கிராமத்து செட் ஒன்று அமைக்கப்பட்டது. முதன் முறையாக இவரின் இயக்கத்தில் இசையமைக்க இருந்தார் இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான். அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்து இருந்ததாம். படத்தின் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது பெற்ற உலக நாயகன் கமல்ஹாசன், இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம், கலை இயக்குனர் தோட்டத்தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் சந்தித்த போது இப்படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் பார்த்திபனிடம் ஞாபகப்படுத்தியுள்ளார். அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன். பல ரசிகர்கள் இப்படத்தினை மறுபடியும் இயக்க பார்த்திபனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 வருடங்களுக்கு முன் துவங்கிய'ஏலேலோ'படத்தின் கதையையும் காட்சிகளையும் எனக்கே ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தி"அந்தப் படம் ஒரு Musical treat விரைவில் செய்வோம், நீங்க தான் வர வர Brisk ஆயிகிட்டு வர்றீங்களே அப்புறமென்ன?"10,000 Watts possitive energy-ஐ charge செய்தனுப்பினார் A R R pic.twitter.com/9T9CEJ6Paw
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 4, 2019