பெண்கள் பொறாமைப்படும் பேரழகு.. அவர் யார் தெரியுமா?.. பிரபலத்தை கண்டு வியக்கும் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கதிர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பேரழகு என குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் மூலம் சிலர் தங்களது திறமையால் மக்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக சீரியல்களை கா்டடிலும் ரியாலிட்டி ஷோக்களே அதிகம் சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குட்டீஸ் முதல் பெரியோர் வரை ரசிக்கும் வகையில் இருப்பது நடனமும், இசையும் தான். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் பெண் கெட்டப்பில் பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு பேரழகில் ஜொலிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கதிர், ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மக்களை கவர்ந்த நாயகனாகவும் வலம் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருக்கிறார். முந்தைய எபிசோடில் இவர் பெண் வேடம் அணிந்து நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது. அதேபோன்று சக போட்டியாளரை விட அச்சு அசலாக பெண் போலவே அவரது நடன அசைவுகளும் இருந்ததாக பாராட்டை பெற்றார்.
பெண் போன்று நடனம்
மேலும், பெண்கள் ஸ்டைல் வாக் செய்தாலே அழகு தான். அதுவும் மாடலிங்கில் பெண்கள் செய்யும் வாக்கிங் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து விடும். அதே போன்று நடிகர் கதிர் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு பெண்களை போன்று ஸ்டைல் வாக் செய்தார். அதை பார்த்து கண் இமைக்காமல் அசந்து போன சினேகா வியந்து பாராட்டினார். நடன இயக்குநர் பாபா பாஸ்கர் கதிரை பார்த்து இது மாதிரி பெண்கள் கூட நடக்க மாட்டாங்க. உண்மையிலேயே ஒரு ஆணுக்கு இதுமாதிரி வரவே வராது. கதிர் நீ கலக்கிட்டடா எனக் கூறி பாராட்டினார். அதேபோன்று நடிகை சினேகாவும் கதிர் நீ செமயா பண்ணிட்ட எனக் கூறினார். மேலும், சக போட்டியாளர்களான ஆண்களும் ஸ்டைல் வாக் செய்தார்கள். ஆனால், கதிர் போன்று யாரும் அசத்தவில்லை.
பெண்ணை போன்ற பேரழகு
இந்நிலையில், நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்ட பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பெண்கள் பொறாமைப்படும் பேரழகு என பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஆமா கதிர் எங்க.. இது கதிர் இல்லை அவரோட தங்கை என கமெண்ட் செய்துள்ளனர். உண்மையில் நீங்கள் பேரழகுதான் என பதிவிட்டுள்ளனர்.





















