"யோகி பாபுவின் மண்டேலா" - முதல் சிங்களை வெளியிடும் சந்தோஷ் நாராயணன்.!
"ஒரு நீதி ஒன்பது சாதி" என்கின்ற அந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிடவுள்ளார்.
முதலில் சின்னத்திரையில் தோன்றி, அதன் பிறகு கடின உழைப்பால் வெள்ளித்திரையில் மின்னும் நட்சித்திரங்கள் தமிழ் சினிமா உலகில் அதிகம். சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் என்று அதற்கு சான்றுபகர்வோர் பலர். அந்த வரிசையில் சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து இன்று தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துள்ள நடிகர் தான் யோகி பாபு.
பாபுவாக சின்னத்திரையில் வளம்வந்த இவர் 2009ம் ஆண்டு சுப்ரமணியம் சிவன் இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்று முதல் இவர் யோகி பாபு என்று அழைக்கப்படுகிறார்.
அன்று தொடங்கி பல படங்களில் அவர் நடித்தாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆண்டுகள் கடந்தது,. 2014ம் ஆண்டு யாமிருக்க பயமேன் படத்தில் "பண்ணி மூஞ்சி வாயன்" என்ற இவர் நடித்த கதாபாத்திரம் ஹிட்டானது. அன்று தொடங்கி யோகி பாபு அவர்களுக்கு ஏறுமுகம் தான் என்றால் அது மிகையல்ல.
2014ம் ஆண்டு 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமான யோகி பாபு, 2019ம் ஆண்டு 28 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். வெகு சில ஆண்டுகளில் கடின உழைப்பால் அசுர வளர்ச்சியை கண்டார். தற்போது காமெடி ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருகின்றார். இறுதியாக சுனைனாவுடன் ட்ரிப் படத்தில் தோன்றிய பாபு தற்போது அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இன்று மாலை இந்த படத்தின் first சிங்கள் பாடல் வெளியாக உள்ளது. "ஒரு நீதி ஒன்பது சாதி" என்கின்ற அந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிடவுள்ளார்.