மேலும் அறிய

‛இங்கே அறிக்கை... அங்கே மாநாடா? உங்கள் உத்தரவை நீங்க முதலில் மதிங்க’ -முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!

‛‛முதலமைச்சர் கட்டுப்பாட்டை மீறுகிறார் என்றால், மக்கள் எப்படி மீறாமல் இருப்பார்கள்,’’ -ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநாடு போன்ற கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது குறித்து அவர் விமர்சித்துள்ளார். இதோ அந்த அறிக்கை அப்படியே...

‛இங்கே அறிக்கை... அங்கே மாநாடா? உங்கள் உத்தரவை நீங்க முதலில் மதிங்க’ -முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!

‛‛ஓமைக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28-12-2021 அன்று 619 ஆகவும், 29-12-2021 அன்று 739 ஆகவும், 30-12-2021 அன்று 890 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கின்ற நிலையில், திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், ஆங்காங்கே கூட்டங்கள் கூடுவது தடுக்கப்படுவதும் தான் முக்கியம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். இதனை நூறு விழுக்காடு உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த பத்து நாட்களில் மட்டும் இரண்டு அறிக்கைகள் வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர்

அவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ அவர் போட்ட கட்டுப்பாட்டினை அவரே மீறியிருக்கிறார். இது மிகுந்த வேதனையளிக்கிறது.

Also Read | Chennai Rain News LIVE Tamil: சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: நாளை வரை கனமழை எச்சரிக்கை!

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை 31-12-2021 வரை நீட்டித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பதாக 13-12-2021 அன்று நாளிட்ட செய்தி வெளியீடு எண். 1336 தெரிவிக்கிறது. அந்தச் செய்தி வெளியீட்டில், பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன் கருதி சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பொருள் என்னவென்றால், அரசு விழா உட்பட பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்படுகிறது என்பதுதான். அதனால்தான் அந்தச் செய்தி வெளியீட்டிலே 'போன்ற' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

‛இங்கே அறிக்கை... அங்கே மாநாடா? உங்கள் உத்தரவை நீங்க முதலில் மதிங்க’ -முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!

இதற்கு முற்றிலும் மாறாக 30-12-2021 அன்று நலத் திட்ட உதவிகள் என்ற பெயரில் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் பெருந்திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு அந்த விழாக்களிலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றியிருக்கிறார். திருச்சியிலே நடைபெற்ற கூட்டத்திலே பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், "நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கி இருக்கிறார். தம்பி மகேஷ் சொன்னார், மாநாட்டு மன்னர் என்று. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவருக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம். டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால்தான் நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு" என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவை மாண்புமிகு முதலமைச்சரே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மாண்புமிகு முதலமைச்சர் கட்டுப்பாட்டை மீறுகிறார் என்றால், மக்கள் எப்படி மீறாமல் இருப்பார்கள். மக்கள் கடல் என்கிறபோது அங்கே முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை கடைபிடிக்கப்பட்டு இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. இதுபோன்ற மாநாடுகளை கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் நடத்துவது கொரோனா நோய்த் தொற்றினை பரப்புவதற்கு சமம். இந்தத் தருணத்தில் இப்படிப்பட்ட மாநாட்டினை கூட்டியதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‛இங்கே அறிக்கை... அங்கே மாநாடா? உங்கள் உத்தரவை நீங்க முதலில் மதிங்க’ -முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்!

எனவே, கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே இருப்பதையும், ஒமைக்ரான் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, சமுதாய, கலாச்சார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் நடப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget