மேலும் அறிய

Thangalaan: இதுதான் புது பேட்டர்ன்..! ஹிந்தி சினிமாவை ரட்சிக்கும் தமிழ் சினிமாக்கள் - கூடுதல் திரையரங்குகளில் தங்கலான்

Thangalaan: தமிழில் ஹிட் அடித்த விக்ரமின் தங்கலான் திரைப்படத்திற்கு , வடமாநிலங்களில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Thangalaan: ஹிந்தி திரையுலகில் ஏற்பட்டுள்ள கதை வறட்சியை, தமிழ் சினிமாக்கள் காப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி சினிமாவை ரட்சிக்கும் தமிழ் சினிமா:

ஹிந்தி பேசும் பிராந்தியங்களில் நிலவும் கதைக்கள வறட்சிக்கு மத்தியில், அங்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 போன்ற தமிழ் படங்கள் நிரப்ப தொடங்கியுள்ளன. .இந்த படங்கள் சில  வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தன. இந்நிலையில்,  வழக்கமான பான்-இந்திய வெளியீட்டு முறையிலிருந்து விலகி, தற்போது  வடமாநிலங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன.

இவை தாமதமாக வெளியிடப்பட்டாலும், வடக்கில் உற்சாகமான பார்வையாளர்களைக் கண்டறிந்துள்ளன. அங்கு திரையரங்குகள் RRR மற்றும் KGF போன்ற பிளாக்பஸ்டர்களின் பிரமாண்டம் இல்லாவிட்டாலும், புதிய கதைக்களங்களை கொண்ட படங்கள் கூட இல்லாமல் காற்றோடி வருகின்றன.

தங்கலான்- வடமாநில திரையரங்குகள் அதிகரிப்பு:

இத்தகைய வறட்சியான சூழலில் தான், வடமாநில திரையரங்குகளை பாதுகாக்கும் பணியை தமிழ் சினிமாக்கள் செய்ய தொடங்கியுள்ளன. இந்தியில் தாமதமாக திரையிடப்பட்ட விஜய் சேதுபதியின் மஹாராஜா  திரைப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்தது. இருப்பினும், பல தென்னிந்திய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நான்கு வாரங்களுக்குள் OTT-ல் வெளியாகிறது. இதனால், PVR ஐனாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் வடக்கில் அவற்றைத் திரையிட மறுக்கின்றன. இருந்தபோதிலும், தமிழ் திரைப்படங்கள் பெருநிறுவனங்கள் அல்லாத மல்டிபிளக்ஸ்கள் மற்றும் சுயாதீன திரையரங்குகளுக்கு ஓரளவு நிவாரணம் அளித்து வருகின்றன. புதிய திரைப்படங்கள் இல்லாத சூழலில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் எங்களுக்கு சிறந்ததே என வடமாநில திரையரங்க உரிமையாளர்கள் சொல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தான் தங்கலான், டிமாண்டி காலணி 2 திரைப்படங்கள் வடமாநிலங்களில் கூடுதல் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்படுகிறது.

திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை:

தமிழ் திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக பேசும் வடமாநில திரையரங்க உரிமையாளர்கள், “தங்கலான் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு அவற்றுக்கான பார்வையாளர்கள் இருப்பதைக் காட்டுகின்றன. எப்படியும் திரையரங்குகளில் அதிக ஆக்கிரமிப்பு இல்லாத இந்த காலங்களில், சில முக்கிய பார்வையாளர்களையாவது ஈர்க்க அந்த படங்கள் தற்போது இங்கு வெளியிடப்படுகின்றன.  இந்தப் படங்களுக்கான பார்வையாளர்களில் பெரும்பாலானோர், ஹிந்தி பெல்ட்டில் வசிக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே ஆவர்.

இந்தப் படங்கள் தெற்கில் வெளியான சமயத்தில், பல ஹிந்திப் படங்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருந்தன. இப்போது, ​​எதுவும் இல்லை, எனவே தாமதமான வெளியீடு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பல தென்னிந்திய ஹீரோக்கள் மெதுவாக பான்-இந்தியா நாயகர்களாக மாறி வருகின்றனர். எனவே, இந்த திரைப்படங்களுக்கு திட்டவட்டமான இழுவை உள்ளது” என தெரிவிக்கின்றனர்.

திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை:

திரைப்பட வெளியீட்டு முறைகளின் மாற்றமும் இந்தப் படங்களின் திரையிடலை பாதித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு முன், ஒரு படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கும் OTT வெளியீட்டிற்கும் இடையே சுமார் எட்டு வாரங்கள் இடைவெளி இருந்தது. இருப்பினும், திரையரங்குகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டதால், பல திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் மிக விரைவில் திரையிடத் தொடங்கின. இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, பழைய வெளியீட்டு அட்டவணைக்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்,  OTT தளங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்துள்ளனர், இது மல்டிபிளக்ஸ் வருவாயை பாதித்துள்ளது.  இதன் விளைவாக, பிவிஆர் ஐநாக்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் தென்னிந்தியப் படங்களை ஹிந்தி பெல்ட்டில் திரையிடத் தயங்குகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget