மேலும் அறிய

‛செம்பருத்தி’ சீரியல் நாயகி வாழ்வில் திருப்பம்: திருமணமான ஒரே மாதத்தில் ஷபானா-ஆர்யன் விவாகரத்தா?

’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம்' என பதிவிட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷபானாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில் ஒரே மாதத்தில் அவர்கள் பிரிய இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த பிரபலமான நடிகை ஷபானா ஷாஜஹான் தமிழ், மலையாள சின்னத்திரையில் முன்னிலை வகிக்கிறார். இவர் தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகையானார். செம்பருத்தி சீரியலில் கிடைத்த நல்ல கதாப்பாத்திரத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார். சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தனியாகவும், தனது தோழிகளுடனும் போட்டோஷூட் எடுத்து அழகாக புகைப்படங்களை ஷேர் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி நாடகத்தில் நடித்து வரும் ஆரியனை தான் ஷபானா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்து வந்த நீண்ட கால நட்பானது காதலாக மலர்ந்தது. இந்நிலையில் இருவருக்கிடையில் உள்ள உறவை பற்றி பல வதந்திகள் பரவி வந்தன.

View this post on Instagram
 
A post shared by Aryan (@aryan_offl)

ஒருவழியாக அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் உறவை பற்றி குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவரும் காதல் உறவில் உள்ளனர் என்பதை தெரிவித்து கொண்டனர். நடிகை ஷபானா காதலிப்பதாக தொடர்ந்து நிறைய வதந்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரியனை ‘மைன்’ என அவரது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலில் இருப்பது உறுதியானது. பின்னர் இருவரும் கையில் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை ஆர்யன் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 11ம் தேதி ஷபானா ஷாஜஹான் திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனக்கு கல்யாணம் நடக்க போவதாக கண்ணீர் மல்க அறிவித்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் ஏன் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுந்தது. ஷபானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் அவசர அவசரமாக திருமணத்தை முடித்து விட்டார் என்றும் தகவல் வெளியானது.

View this post on Instagram
 
A post shared by SHABANA SHAJAHAN ARYAN ⭐️ (@its_shabana_)

அதுமட்டும் இல்லாமல் இந்த திருமணத்தில் ஆர்யன் வீட்டாருக்குச் சுத்தமாக விருப்பமே இல்லை என்பதால் திருமணத்தில் அவரது பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் கசிந்துள்ளது. மேலும் இருவரும் தேனிலவுக்காக புதுச்சேரி சென்ற நிலையில் மறுநாளே திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஷபானா, ஆர்யன் ஆகிய இருவீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஷபானா, ஆர்யன் பிரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இது குறித்து இரு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget