Squid Game Season 2 : ரசிகர்களை மிரள வைக்க வருகிறது ஸ்குவிட் கேம் 2....யார் யாரெல்லம் நடிக்கறாங்க தெரியுமா?
ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் குறித்தத் தகவல் வெளியாகியுள்ளது. யார் யாரெல்லாம் இதில் இணையவிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்!
கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட தொடர் ஸ்குவிட் கேம். கொரோனா, ஒட்டுமொத்த உலகத்தையே வீடுகளுக்குள் முடக்கிவைத்த சமயத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்த வெப் சீரிஸ் ஸ்குவிட் கேம்.
குறிப்பாக இந்திய ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது இந்தத் தொடர். தற்போது இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் குறித்தத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டாவது சீசனில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், படக்குழுவில் பெண் கதாபாத்திரங்கள் குறித்து எதுவும் வெளியிடப்படாததைக் கண்டு வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் ரசிகர்கள்.
Lee Jung-jae, Lee Byung-Hun, Wi Ha-jun, and Gong Yoo will all be returning for Squid Game Season 2!
— Netflix (@netflix) June 17, 2023
And #TUDUM just revealed four new actors who will be joining the cast! pic.twitter.com/0iofoBQ1kB
நடிகர்கள்
இம் சி வான், காம் ஹா நியுல், பார்க் சுங் ஹூன் ஆகிய புதிய நடிகர்கள் இரண்டாவது சீசனில் இணைந்துகொள்ள இருக்கிறார்கள். முதல் சீசனில் நடித்த லீ ஜுங் ஜே (Lee Jung-jae), லீ பியுங் ஹுன் (Lee Byung-hun), வி ஹா ஜுன் (Wi Ha-joon), கோங் யூ (Gong Yoo) ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
அதிருப்தி அடைந்த ரசிகர்கள்
இந்நிலையில், இரண்டாவது சீசனுக்கான புரோமோஷனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் . ஏற்கெனவே இதில் நடித்திருந்த பழைய நடிகர்கள் நின்றுகொண்டிருக்க புதிதாக சில நடிகர்கள் அவர்களுடன் இணைவது போல் காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர்கள் முன் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகள் எறிந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் பச்சை விளக்கைத் தேர்வு செய்து விளையாட்டுக்கு ரெடி ஆகும் வகையில் வீடியோ அமைந்துள்ளது. இந்நிலையில், இந்நிலையில், இந்த வீடியோவில் ஒரு பெண் கதாபாத்திரம்கூட இடம்பெறாததைக் கண்டு ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பம்
வரும் ஜூலை மாதம் இந்தத் தொடருக்கான படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. முந்தைய சீசனைப் போல் அபாயகரமான விளையாட்டுக்கள் இரண்டாவது சீசனில் இடம்பெற்றிருக்காது எனவும் வரும் நவம்பர் மாதம் இந்த சீசன் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்குவிட் கேம்
கடந்த 202 ஆம் ஆண்டு வெளியான ஸ்குவிட் கேம் எம்மி விருதுகளுக்கு தேர்வாகியது. ஆங்கிலம் அல்லாத ஒரு இணையத் தொடர் இந்த விருதுக்காக தேவாவது இதுவே முதல் முறை. அதே சமயத்தில் சிறந்த முக்கிய கதாபாத்திரத்திற்கான விருதை ஹ்வாங் டோங் ஹ்யூக் (Hwang Dong-hyuk) வென்று சாதனைப் படைத்தார். ஆசிய நடிகர் ஒருவர் எம்மி விருதை வெல்வது வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். லீ.யூ.மீ கெளரவ கதாபாத்திரத்திற்கான விருதை வென்றார். கூடுதலாக சிறந்த புரோடக்ஷன் டிசைன், சிறந்த ஸ்டண்ட் காட்சிகள், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகளையும் வென்ற ஒரே ஆசிய தொடர் ஸ்குவிட் கேம்.