Netflix : 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்ததன் எதிரொலி : முக்கிய வெப் சீரிஸை ரத்து செய்தது நெட்ஃபிளிக்ஸ்
மேஹன் மார்கல்ஸின் பெர்ல் (Pearl) என்ற அனிமேசன் வெப் சீரிஸை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
மேஹன் மார்கல் (Meghan Markle) உருவாக்கிய பெர்ல் (Pearl) என்ற அனிமேஷன் வெப் சீரிஸை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸ், திரைப்படங்கள் தயாரிப்பதில் செலவழிப்பதை இனி குறைத்தும்கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்தின் இளைய பேரன் ஹாரியின் மனைவி, மேஹன் மார்கல். மேஹன், அரச குடும்ப வாழ்க்கையே வேண்டாம். அமைதியான வாழ்க்கையேபோதும் என்று முடிவெடுத்தார். இதைத் தொடர்ந்து ஹாரியும், மேஹனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இருவரும் அண்மையில் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தனர். மேலும், இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும் முடிவு செய்தனர். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள மக்களின் சமூக வாழ்வியலை அதன் சூழல்களுடன் எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் கண்டென்ட்டுகளை உருவாக்க உள்ளோம்” என தெரிவித்திருந்தனர் ஹாரி - மேகன் தம்பதியர்.
அதன்படி இருவரும் இயற்கை தொடர்பான ஆவணப்படம் ஒன்றிலும், தன்னம்பிக்கை மிக்க பெண்களை அடையாளம் காண உதவும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.
Netflix ends animated series with Megan Markle https://t.co/FrawXNRMvX pic.twitter.com/RlrbuSFfz1
— TV Tonight Australia (@tvtonightau) May 2, 2022
இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியரின் ஆர்ச்சிவெல் புரோடக்சன் (Archewell Productions) மூலம் தயாரிக்கப்படும் வெப் சீரிஸுக்கு பெர்ல் (Pearl) என்று பெயரிடப்பட்டது. ஒரு சிறுமியின் அசாத்தியமான திறமைகளையும் பெண்களின் வரலாறையும் அடிப்படையாகக்கொண்டு உருவாகி வந்தது. இந்நிலையில், இந்த அனிமேஷன் வெப் சீரிசை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
மேலும், ஆர்ச்சிவெல் புரோடக்சனின் Heart of Invictus என்ற ஆவணப்படம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. இந்த வெப் சீரிஸின் தயாரிப்பு பணிகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடந்த மூன்று மாதங்கள் வரலாறு காணாத அளவில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருந்தது. அதன் காரணமாக விற்பனையை பெருக்க பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொள்ள போவதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்திருந்தது.
பெர்ல் சீரிஸ் உடன் Dino Daycare மற்றும் Boons and Curses என்ற அனிமேஷன் வெப் சீரிஸையும் ரத்து செய்துள்ளது.