மேலும் அறிய

‘NEEK’ புகழ் பவிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்தார்!

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பவிஷின் புதிய படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும், Production No.1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் பவிஷ் நடிக்கும் புதிய படம் 

சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் Pan-Indian நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். 

பவிஷ் பற்றி இயக்குநர் செல்வராகவன் 

“I’m Super, Super, super happy that Pavish is going to learn from master Dhananjheyan sir”. என்று குறிப்பிட்டிருந்தார்.பவிஷ் கடந்த ஆறு மாதங்களாக பல இயக்குனர்களிடமிருந்து வந்த திரைக்கதைகளை கேட்டபின், இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் அவர்களின் கதையை தேர்வு செய்துள்ளார்.மகேஷ் ராஜேந்திரன், பிரபல இயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் “போகன்” மற்றும் “பூமி” போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவர் தற்போது இளம் தலைமுறை ரசிகர்களுக்கான ஒரு ரொமான்டிக் என்டர்டெய்னர் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு திரைப்பட உலகில் இருந்து ஒரு புதிய நடிகை, யூடியூப் சென்சேஷன் எனப் பெயர் பெற்ற நாகா துர்கா, தமிழில் தனது முதல் திரையறிமுகத்தைச் செய்யவிருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், ஆரண்ய காண்டம், மத கஜ ராஜா, விடா முயற்சி போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார், பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய மகேந்திரன் கலை இயக்குனராக பணியாற்றுகிறார், ஆடை வடிவமைப்பாளராக ஹர்ஷிகா பணியாற்றுகிறார், அபிஷேக் சண்டை காட்சிகளை இயக்குகிறார். மேலும், Think Music ஆதரவுடன் புதிய இசை திறமையாளர்கள் அறிமுகமாகவிருக்கிறார்கள் அவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் பிரபல நடிகர்கள் பலர் இடம்பெறுகின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குனர் விஜய்-யின்  D Studios Post குழு மேற்கொள்கிறது.

Zinema Media and Entertainment Ltd மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனங்கள் இதற்கு முன் இணைந்து வெளியிட்ட “பிளாக்மெயில்” (BLACKMAIL) திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே அணியினர் மீண்டும் இணைந்து இந்த இளம் தலைமுறையினருக்கான காதல் திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று (அக்டோபர் 27, 2025) சென்னையில் பூஜையுடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று, 2026 தொடக்கத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இயக்குனர்-எழுத்தாளர் மகேஷ் ராஜேந்திரன் கூறுகையில்

இந்த திரைப்படம் இளம் தலைமுறை (Gen Z) ரசிகர்களும், குடும்பங்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பிரபல நடிகர்களும் புதிய அம்சங்களும் இணைந்துள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்த படம் மரபும் நவீனமும் கலந்த, ஆச்சரியம் மற்றும் கவிதை நிறைந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. 2026 கோடை வெளியீடாக இப்படம் இருக்கும். மேலும், இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களும், நடிகர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

Zinema Media and Entertainment Ltd பற்றி,

Zinema Media and Entertainment Ltd என்பது திரைப்பட மேம்பாடு, தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகிய துறைகளில் முன்னணி நிறுவனமாகும். மேலும் விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதுமையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஆர்.ஓ : ரேகா 
டிஜிட்டல் ப்ரோமோஷன்ஸ் :Digitally N.S.ஜெகதீசன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வாய்ப்பு தராத ஆண்கள் அணி இந்திய மகளிர் அணியின் சிற்பி யார் இந்த அமோல் முசும்தார்? REAL LIFE BIGIL | Amol Anil Muzumdar
விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
All Party Meet on 6th: பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
பொதுக்கூட்ட கட்டுப்பாடுகள்; நவம்பர் 6-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்; தமிழ்நாடு அரசு அழைப்பு
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
Thirumavalavan: அதிமுக துரோகம்.. மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் - சபதம் எடுத்த திருமா
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
’’திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை'’ கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி விளாசல்!
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
Top 10 News Headlines: கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, ட்ரம்ப்பை மீறி செயல்படும் ஈரான், WC ODI-மகளிர் அணி சாதனை - 11 மணி செய்திகள்
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, ட்ரம்ப்பை மீறி செயல்படும் ஈரான், WC ODI-மகளிர் அணி சாதனை - 11 மணி செய்திகள்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த சோகம்: சிபிஐ அதிரடி விசாரணை! விஜய் விசாரிக்க திட்டம் ?
விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த சோகம்: சிபிஐ அதிரடி விசாரணை! விஜய் விசாரிக்க திட்டம் ?
Embed widget