மேலும் அறிய

Nayanthara-Vignesh Shivan: காமாட்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்த மூக்குத்தி அம்மன்.. காதல் பொங்க வேடிக்கை பார்த்த சிவன்!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகாலமாக காதலர்களாக இருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்து தம்பதிகளாக மாற உள்ளனர். இந்நிலையில் இருவரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேல வழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கல் வைத்து படையலிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியானபடியே உள்ளது.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும்- நயன்தாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதேபோல் விக்னேஷ் சிவனும் படங்களை இயக்கி வந்தனர். இருவரும் ஒன்றாகவே பல வெளிநாடுகளில் காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும் இருவரும் ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கும் பரிசுகள் கொடுப்பது, இருதரப்பு பெற்றோர்களுடன் சந்திப்பு நடத்துவது என்று இருந்து வந்தனர். தொடர்ந்து, ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை விநியோகித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் பல கோயில்களுக்கு நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் ஜோடியாக சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அப்போதே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேச்சு அடிபட தொடங்கியது. இதற்கிடையில் விக்னேஷ்சிவன் 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தை இயக்கினார். இந்த படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. 

இதற்கு முன்பு ஒரு பேட்டியில், தானும் நயன்தாராவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ரிலீஸ் செய்த பின்பு திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகி போது திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

Nayanthara-Vignesh Shivan: காமாட்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்த மூக்குத்தி அம்மன்.. காதல் பொங்க வேடிக்கை பார்த்த சிவன்!

படத்தின் ரிலீஸ் ஆனபின்னர் இருவரும் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர். திருப்பதிக்கும் அவர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில்தான் வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கோலிவுட்டின் சிறப்பான ஜோடியாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் இருவரது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூருக்கு விக்னேஷ்சிவன் – நயன்தாரா ஜோடியாக காரில் வந்து இறங்கினர். அவ்வளவுதான் மேல வழுத்தூரே திரண்டு கோயிலுக்கு வந்து விட்டது. மேலவழுத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில்தான் அது. இந்த கோயில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயில் என்று கூறப்படுகிறது.
 
கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறப்பு வழிபாடு செய்தனர். வரும் ஜூன் 9-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். பின்னர் சர்க்கரை பொங்கலிட்டு நயன்தாரா சிறப்பு வழிபாடு செய்தார். திரண்டு நின்றிருந்த பொதுமக்களின் நயன்தாராவை பார்த்தவுடன் உற்சாகத்துடன் குரல் எழுப்பினர். அவர்களை பார்த்து சிரித்தபடியே நயன்தாரா கோயில் வெளிப்புறத்தில் பொங்கல் வைத்து படையல் இட்டார். 

Nayanthara-Vignesh Shivan: காமாட்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்த மூக்குத்தி அம்மன்.. காதல் பொங்க வேடிக்கை பார்த்த சிவன்!

பின்னர், அங்கிருந்து கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்ற விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதியில் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு கோவிலில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், கோவில் யானைக்கு வாழைப்பழம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர். அரைமணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Breaking News LIVE: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
Embed widget