Nayanthara-Vignesh Shivan: மீண்டும் ஹனிமூனில் விக்கி நயன்... இப்ப எங்க போறாங்க தெரியுமா?
Nayanthara-Vignesh Shivan: தொடர்ச்சியான வேலையின் பின்னர் இங்கே நாங்கள் எங்களுக்கென சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம், என மீண்டும் வெகேஷன் சென்ற விக்கி - நயன் ஜோடி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திருப்பதியில் நடக்கவிருந்த திருமணம், சென்னை மாமல்லபுரத்துக்கு மாற்றபட்டது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவந்தார்.
View this post on Instagram
தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் விக்னேஷ் சிவன், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. ஹனிமூனில் இருந்து வந்த கையுடன் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாடை இயக்கும் வேலைக்கு சென்ற நிலையில், நயன்தாரா ஜவான் பட ஷூட்டிங்கிற்கு மும்பை சென்றார்.
இந்நிலையில் விக்கி நயன் ஜோடி மீண்டும் வெகேஷனை கொண்டாட பார்சிலோனா சென்றுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
நயன்தாரா விக்கி ஜோடியின் திருமணம் நெட்ஃபிளிக்ஸில் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் இதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டு இருந்தனர்.
Cue the malems cos we're ready to dance in excitement💃
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG