மேலும் அறிய

Sushant Singh Rajput: பாலிவுட்டில் ஒரு பக்க சார்பு... சுஷாந்தை பலி கொடுத்துவிட்டோம்...நடிகர் நவாசுதீன் கவலை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் பலிகொடுத்துவிட்டோம் என சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் என்கிற விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போட்டிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம் என நடிகர் நவாசுதீன் சித்திக் கவலை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனது திறமையால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தைப் பெற்றவர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் நெப்போடிஸம் குறித்தும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் நவாசுதின் சித்திக்.

”நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். எனக்கு கிடைத்த வாய்ப்பு இன்னொருவருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் . நான் வாழ்நாள் முழுக்க துணை நடிகனாக மட்டுமே நடிக்கும் சாத்தியங்களோடுதான் என் கரியர் தொடங்கியது. நான் பாடிபில்டர் கிடையாது, நான் அழகான தோற்றம் கொண்டவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

எனது நடிப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பாலிவுட்டில் நான் பிழைத்து வருகிறேன். ஒரு படத்தில்  நான் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை புதிதாக அதில் நிகழ்த்தியியிருப்பேன் என ரசிகர்கள் நம்பும் அளவிற்கு எனது கரியரை வளர்த்துள்ளேன். பணத்துக்காக எல்லா படங்களிலும் நான் நடிக்கத் தொடங்கினால் ரசிகர்கள் என்னை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் நான் செலக்டிவான கதைகளில் நடிக்கிறேன்.

பாலிவுட்டில் நெப்போடிசத்தால் நான் எந்த பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அப்படி ஒன்று இல்லையென்று சொல்ல மாட்டேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் எனும் விலைமதிப்பில்லாத நடிகரை நாம் நெப்போடிசத்திற்கு பலிகொடுத்துவிட்டோம். எத்தனையோ திறமையான நடிகர்கள் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை அவர்கள் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்திருக்கும். ஆனால் ஒன்று  நிச்சயம், யாருடைய திறமையும் யாராலும் ஒளித்துவைக்க முடியாது. போராடினால் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்க முடியும்.

வேறு சில வகைகளில் நானும்  நிறைய அவமானங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். உணவு வேளைகளில் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறேன். ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பெரிய நடிகர்களையும் யுனிட்டை சேர்ந்தவர்களையும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வைக்கிறது. இங்கு எல்லோரும் சமம் என உணர வைத்தால் போதுமானது.” எனப் பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget