மேலும் அறிய

68 வயதில் 7 ஆம் வகுப்பு பரிட்சை எழுதிய மலையாள நடிகர் இந்திரன்

தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் இந்திரன் தனது 68 ஆவது வயதில் 7 ஆம் வகுப்பு பரிட்சை எழுதியுள்ளது ரசிகரகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

மலையாள நடிகர் இந்திரன்ஸ் 68 வயதில் 7 ஆம் வகுப்பு தகுதி தேர்வில்  பங்கேற்றுள்ளார். கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்தும் இந்தத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் அவர் நேரில் கலந்து கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையத்தில் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவில் காஸ்டியூம் டிசைனராக சேர்ந்து பின் நடிப்பிற்கு வந்தவர் இந்திரன். சின்ன கதாபாத்திரங்கள் தொடங்கி முக்கிய கதாபாத்திரமாக கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில்  இந்திரன் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இவர் நடித்த ஹோம் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றார்.   தனது சிறுவயதில் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 25 வருட சினிமா வாழ்க்கைக்குப் பின் தற்போது பாதியில் நின்ற தனது ஆசையை தனது குடும்பத்தின் உதவியுடன் நிறைவேற்றியுள்ளார் இந்திரன்

68 வயதில் பள்ளிக்கு திரும்பிய இந்திரன்  

முன்னதாக நேரடியாக 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத இந்திரன் நினைத்துள்ளார். ஆனால் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத அவர் 7 ஆம் வகுப்பு தகுதித் தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் என்று கூறப்பட்டதால்

கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்தும் ஏழாம் வகுப்பு தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளார். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, பத்தாம் வகுப்பு தேர்வை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தயாரிப்பில் அவர் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஈடுபட்டிருந்ததாகவும், தேர்வு நாளில் மையத்திற்கு சென்று தேர்வை எழுதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்திரன் கூறுகையில் " நான் திருவனந்தபுரத்தில் தான் பள்ளி படித்தேன். என் வகுப்பில் தொடர்ச்சியாக முதல் ரேங் எடுக்கும் மாணவன்  நான். எங்கள் பள்ளியில் முதல் பதிப்பெண் எடுக்கும் மாணவர்களை முதல் பெஞ்சில் அமர வைப்பார்கள். நான் எப்போதும் முதல் பெஞ்சில் தான் அமர்ந்திருப்பேன். நான் நான்காவது படிக்கும்போது எங்கள் பள்ளியில் உடையை கட்டயமாக்கினார்கள். யுனிஃபார்ம் வாங்க முடியாத காரணத்தினால் அந்த வருடம் நான் பள்ளிக்கு போகவில்லை. எங்கள் வீட்டில் மொத்தம் 7 குழந்தைகள் என்பதால் எங்களால் பள்ளி சீருடையும் புத்தகமும் வாங்க முடியவில்லை. அப்படிதான் என் பள்ளி படிப்பு பாதியில் நின்றுபோனது." என இந்திரன் தெரிவித்துள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget