மேலும் அறிய

Samantha | சமந்தா - சைதன்யா விவகாரத்தால் வருந்துகிறேன்: மாமனார் நாகர்ஜுனா

சமந்தா, சைதன்யா பிரிவால் வருந்துகிறேன் என மாமனார் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமந்தா, சைதன்யா பிரிவால் வருந்துகிறேன் என மாமனார் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாம், சை இருவரும் பிரிந்திருப்பது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அவர்கள் பிரிவு எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் அவர்களின் தனிப்பட்ட விஷயம். எதுவாக இருந்தாலும் எங்கள் குடும்பம் எப்போதும் போல் சமந்தாவை நேசிக்கும். சமந்தா எங்களுடன் இருந்த நாட்களை, எங்களுடன் செலவழித்த நேரத்தை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். இப்போதைக்கு சாம், சை இருவருக்கும் மனவலிமையை இறைவன் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பிரிவை அறிவித்த சாம், சை:

முன்னதாக, இன்று பிற்பகலில்  சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு,  எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்.

மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றபோது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர்,  "கோவிலுக்கு வந்து இதை  கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டதும் விவாகரத்து ஆகப்போகிறதென்ற செய்திகளுக்கு வலு சேர்த்தன. என்னதான் ஊடகங்கள் செய்தி பரப்பினாலும்   சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தனர்.


Samantha | சமந்தா - சைதன்யா விவகாரத்தால் வருந்துகிறேன்: மாமனார் நாகர்ஜுனா

இந்நிலையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.  எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்க பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும் என இருவரும் ஒரே பதிவை இட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget