Leo Naa Ready Song :லியோ படத்தில் ‘நான் ரெடி’ பாடல் பண்ண சாதனை தெரியுமா உங்களுக்கு?
லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடி பாடல் 100 மில்லியன் வியூஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
![Leo Naa Ready Song :லியோ படத்தில் ‘நான் ரெடி’ பாடல் பண்ண சாதனை தெரியுமா உங்களுக்கு? Naa ready song from leo crossed 100 million views in youtube Leo Naa Ready Song :லியோ படத்தில் ‘நான் ரெடி’ பாடல் பண்ண சாதனை தெரியுமா உங்களுக்கு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/8877f5e2e969322ae58c54092b50aff81692185948623571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.
இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்புகள் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ‘நான் ரெடி’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) வியூஸைக் கடந்துள்ளது. இதனையொட்டி ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #NaaReady100Million என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரமான ஹரோல்ட் தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயின் லியோ படம் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கோலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்ட முக்கியமான நடிகர் விஜய். அவரின் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். இந்நிலையில் வழக்கம் போல் இந்த முறையும், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்சில் ரஜினி சொன்ன கழுகு- காகம் ஸ்டோரி மூட்டிய தீ இணையத்தில் இதுவரை புகைந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லியோ ஆடியோ லாஞ்ச்சில் விஜய் என்ன பேச போகிறார்? ரஜினியின் ஸ்டோரிக்கு பதில் கொடுக்கும் வகையில் அவரும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வாரா? என்ற ஆர்வத்துடன் அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் லியோ திரைப்படத்தின் வெற்றி வாயிலாக விஜய் பதில் அடி கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)