(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay Devarakonda : குஷி படப்பிடிப்பின் போது விஜய் தேவரகொண்டாவுடன் பேசுவதை நிறுத்திய சமந்தா... என்ன காரணம் தெரியுமா?
குஷி படப்பிடிப்பின் போது சமந்தா தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதற்கான காரணம் குறித்து விஜய் தேவரகொண்டா மனம் திறந்தார்.
குஷியில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து இதுவரை அறியாத விஷயங்களை விஜய் தேவரகொண்டா பகிர்ந்து கொண்டார். சமந்தா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக சமீபத்தில் ஒப்புக்கொண்ட அவர், குஷியின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவுடன் இணைந்து அழகான நடனம் ஆடினார்.
அவர் சமந்தாவின் மயோசிடிஸ் பற்றியும் பகிர்ந்துகொண்டார். 2021-இல் குஷி படப்பிடிப்பின்போது சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் இருந்தது கண்டறியப்பட்ட போது குஷி படத்தின் 60 சதவீதம் ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. படப்பிடிப்பு பாதியை தாண்டும் நிலையில் சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது சமந்தா, நான் உட்பட பட குழுவினருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக விஜய் தேவரகொண்டா கூறினார்.
“என்னை விட, சமந்தா சிரிப்பதை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் புன்னகையுடன் தொடங்கி 60 சதவீதம் முடித்திருந்தோம். 30-35 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் இருந்தது. ஜூலையில், சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்தது. அவர் உடல்நிலை சரியில்லை” என்று கூறினார். நானும் சிவனும் “நீங்க அழகா இருக்கீங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?" என கேட்டோம். நாங்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். பின்னர், அவருடைய உடல்நிலை எங்களுக்குப் புரிந்தது. இவ்வாறு அவர் கூறியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
“ஜூலை மாதம், எனது மற்றுமொரு படத்தை ப்ரமோஷனின்போது சமந்தாவின் உடல்நிலை குறித்து அறிந்தேன். ஆரம்பத்தில் அவர் அதைப் பற்றி பேசவில்லை” என்றார். ”நாம் நடிகர்கள், கதைசொல்லிகள்” என்று சமந்தாவிடம் கூறியதாக விஜய் தேவர்கொண்டா கூறினார். எங்கள் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதில்லை என்று உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு, சமந்தா தனது உடல்நிலையைப் பற்றி பேசுவது தனது பொறுப்பு என்று உணர்ந்தார். சமந்தா எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். எங்கள் அனைவரையும் பார்ப்பதை நிறுத்தினார். சமந்தாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் போராட்டங்களை சந்தித்தார். நம்பிக்கை இருக்கிறது என்று மக்களுக்குச் சொல்ல, அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்ததாக விஜய் தேவர்கொண்டா கூறினார்.
அக்டோபர் 2021- இல் நடந்த போரைப் பற்றி சமந்தா கூறினார். இன்ஸ்டாகிராமில் தனது போராட்டம் மற்றும் அவரது மீட்புப் பயணம் பற்றி விரிவாகப் பகிர்ந்துள்ளார். சமந்தா மீண்டும் பணிக்கு திரும்பினார். யசோதா, சாகுந்தலம் ஆகியவற்றை முடித்து விட்டு குஷிக்குத் திரும்பினார்.
நாங்கள் இன்று [ஆகஸ்ட் 15] கிட்டத்தட்ட 50-60 பேரைச் சந்தித்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அவரிடம் வந்து தங்கள் உடல்நலப் பிரச்சினைகளை கையாள்வதற்கு சமந்தா ஒரு உத்வேகமாக இருந்தார் என்றும் கூறினார்கள். சமந்தா செய்தது சரி என்று உணர்ந்தேன். அவர் இன்று பூரண ஆரோக்கியமாக இல்லை என்பது எனக்குத் தெரியும். சமந்தா வெளிச்சத்தை எதிர்கொள்ளும்போது தலைவலி மற்றும் கண்வலி ஏற்படுகிறது. ஆனாலும், அவர் நம்பிக்கையுடன் நடமாடுகிறார். நீங்கள் அனைவரும் உங்கள் அன்புடன் இங்கே இருக்கிறீர்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் உங்களுக்காக சிரிக்கிறார், நடனமாடுகிறார். எல்லோரையும் விட, செப்டம்பர் 1 -ஆம் தேதி அவர் முகத்தில் ஒரு பெரிய புன்னகையைப் பார்க்க விரும்புகிறேன். அது என் பொறுப்பு என்று நான் உணர்கிறேன், "இவ்வாறு விஜய் தேவர்கொண்டா நிகழ்ச்சியில் கூறினார்.
தனது மீட்பு பயணத்தின் போது, தனக்காக காத்திருந்த விஜய் மற்றும் குழுவினருக்கு சமந்தா நன்றி தெரிவித்திருந்தார். குஷி செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.