Ilaiyaraja : எத்தனை பங்களா உள்ளது..? நீதிமன்றத்தின் கேள்விக்கு இளையராஜா நெத்தியடி பதில்
குணா , தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்

இளையராஜா
குணா , தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா இன்று ஆஜரானார்.
இசையமைப்பாளர் இளையராஜா மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, 1 மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு, முழு ஈடுபாடும் இசையில் உள்ளது, உலகலாவிய பொருட்களை பற்றி எனக்கு தெரியாது, பேர், புகழ் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என இளையராஜா பதிலளித்துள்ளார்
பாண்டியன், குணா , தேவர் மகன் , உள்ளிட்ட 109 படங்களின் காப்புரிமையை மியூசிக் மாஸ்டர் நிறுவனம் பெற்றுள்ளது. தங்கள் அனுமதியின்றி இப்படங்களின் பாடல்களை யூடியூப் சேனல்களில் பயன்படுத்துவதை தடை விதிக்க கோரி கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது பாடல்களின் காப்புரிமைக்கான ஒப்பந்தம் செய்தபோது அதில் சமூக வலைதளங்களில் பயண்படுத்துவது குறித்து குறிப்பிடப் படவில்லை. ஆடியோ ஆல்பத்திற்கான ஒப்பந்தம் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று இந்த பிப்ரவரி 13 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி பி இளங்கோ முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சாட்சியமளிக்க இளையராஜா நீதிபதி முன் ஆஜரானார். மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் இளையராஜாவிடம் விசாரணையை மேற்கொண்டார். இளையராஜாவிடம் பாடல்களின் பதிப்புரிமை மற்றும் தயாரிப்பாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து குறுக்கு விசாரணை நடைபெற்றது. ஒரு மணி நேர விசாரணைக்குப் பின் நீதிபதி இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
சமீபத்தில் இளையராஜா இசையமைத்த மூடு பனி படத்தின் பாடல்கள் இளையராஜாவுக்கு அல்ல சரிகம நிறுவனத்திற்கே சொந்தம் என டெல்லி உயர் நீதிமன்றன் உத்தரவிட்டது. இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலை யுவன் சமீபத்திய படத்தின் ரிமிக்ஸ் செய்திருந்ததால் இந்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சரிகம நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.

