OTT Release : போர் தொழில் முதல் காதர் பாஷா வரை...இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்களைப் பார்க்கலாம்
ஓடிடி நிறுவனங்கள் வந்தபிறகு இருக்கும் ஒரு நல்லது என்னத் தெரியுமா? சுமாராகவோ சூப்பராகவோ , திரையரங்கங்களில் எப்படி ஓடினாலும் சில வாரங்களில் ஒரே நாளில் அந்தப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிவிடும் என்பதுதான். அப்படி இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் மூன்று தமிழ்ப் படங்கள் என்னத் தெரியுமா?
போர் தொழில்
E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் போர்த் தொழில். வெகு நாட்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல த்ரில்லாராக பாராட்டப்பட்டது போர் தொழில் படம். வரும் ஜூலை 7 ஆம் தேதி சோனி லைவ் இல் வெளியாக இருக்கிறது போர் தொழில்.
டக்கர்
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வரும் ஜூலை 7 ஆம் தேதி நெட்ஃப்ளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது டக்கர்.
Siddharth's #Takkar, streaming on @SimplySouthApp from July 7 @Karthik_G_Krish | #Siddharth | @iYogiBabu | @itsdivyanshak | @nivaskprasanna | @Sudhans2017 | @PassionStudios_ #OTT_Trackers pic.twitter.com/S9nMVCsFM8
— OTT Trackers (@OTT_Trackers) July 5, 2023
காதர் பாஷா
Kari kulambu Vaasam Ivanga kaadhal endrum mudiyatha Paasam 😍💕#KatharBashaEndraMuthuramalingamOnZEE5 Premieres from 7th of July only on #ZEE5@ZEE5Tamil @arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @jungleemusicSTH @ertviji pic.twitter.com/TdPmaBm9TW
— ZEE5 Tamil (@ZEE5Tamil) July 5, 2023
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், இயக்குநர் முத்தையா இயக்கி ஆர்யா நடித்த திரைப்படம் காதர் பாஷா, இதில் ஹீரோயினாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இதானி கதாநாயகியாக நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 2-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. வரும் ஜூலை 7-ஆம் தேதி ஜீ ஃபைவில் வெளியாக இருக்கிறது காதர் பாஷா திரைப்படம்