Sai Pallavi: எந்த ஒரு நடிகையும் செய்யாத செயல்; சாய்பல்லவி செயலால் நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!
சாய் பல்லவி நடித்த படம் தோல்வியை கொடுக்கவே, அந்தப் படத்தின் சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார். பலருக்கும் தெரியாத தகவல் இதோ...
சாய் பல்லவி:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இப்போது வளர்ந்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. கஸ்தூரி மான் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி, அதன் பிறகு தாம் தூம் திரைப்படத்திலும் கங்கானாவின் தங்கையாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானாலும் இவருக்கு கதாநாயகி அந்தஸ்தை பெற்று தந்தது, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் தான்.
இதை தொடர்ந்து தமிழில் தன்னுடைய முதல் படமான தியா படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் சாய் பல்லவி. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே, உட்பட சமீபத்தில் வெளியான அமரன் முதல் கொண்டு தனித்துவமான நடிப்பால் மிரட்டி இருந்தார்.
அமரன்:
குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், சாய் பல்லவிக்கு இதுவரை தமிழில் எந்த ஒரு படமும் பெற்று தந்திடாத பெயரை கொடுத்தது. சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கும் என்பதே பல சினிமா விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது. மேலும் இந்தப் படம் ரூ.335 கோடி வரையில் வசூலை குவித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் கைவசம், ஒரு தெலுங்கு, மற்றும் 2 ஹிந்தி படங்கள் உள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி சம்பளம் வாங்க மறுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு, Padi Padi Leche Manasu என்ற தெலுங்கு படம் திரைக்கு வந்தது. ஹனு ராகவபுடி இயக்கிய இந்தப் படத்தில், சர்வானந்த், சாய் பல்லவி, பிரியா ராமன், சம்பத் ராஜ், முரளி சர்மா, சுனில் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
சம்பள பணத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி:
இந்த படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் படத்தில் வசூல் பாதிக்கப்பட்டது. ரூ.8 கோடி வரையில் மட்டுமே வசூல் செய்ததால் தயாரிப்பாளர் மிகவும் நொந்து போய் உள்ளார். இந்த படத்திற்கு சாய் பல்லவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேச பட்ட நிலையில், 50 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. படத்தின் தோல்வியால், தயாரிப்பாளர் கடன் உடன் பட்டு தன்னுடைய சம்பள பாக்கியை தரவேண்டாம் என எண்ணி மீதம் சம்பளத்தை வாங்காமல் தவிர்த்து விட்டாராம். தயாரிப்பாளர் சாய்பல்லவி செயலால் நெகிழ்ந்து போன நிலையில் இந்த தகவல் கேட்பவர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.