Mohanlal car: கோடிகளை கொட்டி மோகன்லால் வாங்கிய புதிய சொகுசு கார்.. அம்மாடியோவ் இத்தனை வசதிகளா..!
மலையாள நடிகர் மோகன் லால் வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபையோ கிராபி கார் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
மலையாள நடிகர் மோகன் லால் வாங்கியுள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபையோ கிராபி கார் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த காரின் விலை சுமார் 5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
மோகன் லால்:
மலையாள திரையுலகின் உச்சநட்சத்திரமான மோகன் லால், மொழிகளை கடந்து நாடு முழுவதும் பிரபலமானவர் ஆவார். கார் பிரியரான இவர் பல்வேறு சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் புதியதாக, ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பையோகிராபி 4.4 V8 கார் மாடலை வாங்கியுள்ளார். அந்த காரை அவர் பெற்றுக்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இந்த வெள்ளை நிற காரின் மதிப்பு 5கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
View this post on Instagram
மனைவியுடன் மோகன்லால்:
கேரளாவின் கொச்சியில் உள்ள குண்டனூர் பகுதியில் மோகன் லால் வாங்கியுள்ள புதிய வீட்டில் வைத்து, இந்த புதிய சொகுசு கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது, தனது மனைவி சுசித்ரா உடன் சேர்ந்து காரின் சாவியை மோகன் லால் பெற்றுக்கொண்டுள்ளார்.
காரின் சிறப்பம்சங்கள்:
ரேஞ்ச் ரோவரின் இந்த புதிய மாடல் காரானது ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது, இதில் 2997சிசி டீசல் இன்ஜின் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2996cc, 2997cc, 2998cc, 4367cc மற்றும் 4395cc ஆகிய இன்ஜின் விருப்பங்களில் அடங்கும். இந்த வாகனம் டைனமிக் ரெஸ்பான்ஸுடன் கூடிய மின்சார ஏர் சஸ்பென்ஷனையும், இரட்டை டர்போசார்ஜரையும் கொண்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை, வெறும் 6.1 விநாடிகளில் இந்த கார் எட்டிவிடும்.
சிறப்பு அம்சங்கள்:
டிரைவிங் வசதியை மேம்படுத்த, இது அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங், முன் மற்றும் பின் பவர் ஜன்னல்கள் மற்றும் பவர் பூட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பாதுகாப்பான பிரேக்கிங்கிற்கான டார்க் வெக்டரிங் கொண்ட மின்னணு செயலில் வேறுபாடு ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயணிகள் வசதியை உறுதிப்படுத்த மூன்று மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டுள்ளது.
கார் பிரியர் மோகன் லால்:
கார் பிரியரான மோகன்லால் ஏராளமான ஸ்போர்ட்டி கார்களை வைத்துள்ளார். அதன்படி, டொயோட்டா லேண்ட் க்ரூஸர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350, டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லம்போர்கினி உருஸ் ஆகிய கார்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. டொயோட்டாவின் மினிவேன் வெல்ஃபேர் கார் மாடலை இந்தியாவிலேயே முதல் நபராக வாங்கியது மோகன் லால் தான். இந்நிலையில் தான் புதியதாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோ பையோகிராபியை வாங்கியுள்ளார். சுவாரஸ்யம் என்னவென்றால் மோகன் லால் வைத்திருக்கும் அனைத்து கார்களும் வெள்ளை நிறத்தில் உள்ளன.