Captain Miller: ”நடிப்பு அசுரன் தனுஷ்” - கேப்டன் மில்லர் படத்தை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் உதயநிதி!
Captain Miller: “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் #CaptainMiller”
நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளியாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பீரியட் ஜானரில் ஆக்ஷனில் மிரட்டலாக வெளிவந்து இருக்கும் கேப்டன் மில்லர் படம் தனுஷூக்கு கம்பேக் கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் 3 கெட்டப்களில் நடித்துள்ள தனுஷ் கேப்டன் மில்லராக நடித்து அசத்தி இருப்பபதாக பாசிட்டிவ் விமரசனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தையும் அதில் நடித்துள்ள தனுஷ் மற்றும் படக்குழுவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், நம்ம சிவா அண்ணா, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதர் ஜிவி பிரகாஷ், பிரியஞ்கா மோகன், சண்டை பயிறியாளர் திலீப், தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து #CaptainMiller என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் @dhanushkraja, திரு.@NimmaShivanna, இயக்குனர் #ArunMadheswaran, இசை அமைப்பாளர் சகோதரர் @gvprakash, @SathyaJyothi,…
— Udhay (@Udhaystalin) January 12, 2024
இதற்கிடையே, கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் எவ்வளவு என சாக்நிக் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் மில்லர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் இந்தியாவில் மட்டும் ரூபாய் 8.65 கோடி வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் கேப்டன் மில்லர் படம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழில் மட்டும் ஐமேக்ஸில் மட்டும் 67 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஹிந்தியில் மட்டும் மொத்தம் 849 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி ஐமேக்ஸ் காட்சிகள் மட்டும் 31. கன்னட மொழியில் 84 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் மட்டும் 2,459 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Captain Miller Day 1 Collection: தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்ஷன்!