Captain Miller Day 1 Collection: தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்ஷன்!
Captain Miller Box Office Collection: நடிகர் தனுஷ் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வெளியாகியுள்ளது கேப்டன் மில்லர்.
தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. ஆனால் 2000-களின் பிற்பாதியில் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது என்பது முழுக்க முழுக்க படத்தின் கலெக்ஷனை வைத்து என ஆகிவிட்டதால் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் கலெக்ஷன் எவ்வளவு என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டு விடுகின்றது.
அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படங்கள் என்றால் அது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பீரியாடிக் ஜானரில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் 5 சதவீதம் மட்டுமே நாங்கள் வைத்த லைட் செட்டிங். மீதி எல்லாமே இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். அதையே பயன்படுத்தி கொண்டுள்ளோம். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்காக 125 நாட்கள் செலவிடப்பட்டது. அதில் 75 நாட்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தார். படத்தின் ஒரு இடத்தில் சுமார் 1000 நபர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த சண்டை காட்சி தான் படத்தின் ஹைலைட் என இயக்குநர் அருன் மாதேஸ்வரன் கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இதன் அடிப்படையில் நேற்று வெளியான கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் எவ்வளவு என சாக்நிக் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேப்டம் மில்லர் திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் இந்தியாவில் மட்டும் ரூபாய் 8.65 கோடி வசூல் செய்திருக்கும் என கூறியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் கேப்டன் மில்லர் படம் இந்தியாவில் மொத்தம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழில் நேற்று மட்டும் ஐமேக்ஸில் மட்டும் 67 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது.
இது இல்லாமல் ஹிந்தியில் மட்டும் மொத்தம் 849 காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி ஐமேக்ஸ் காட்சிகள் மட்டும் 31. கன்னட மொழியில் 84 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. மொத்தம் இந்தியாவில் மட்டும் 2,459 காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதில் கலெக்ஷன் ஆன முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 8.65 கோடி என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.