Ankita Konwar | அப்போதே பாலியல் சீண்டல்... நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டனர் - புலம்பும் அங்கிதா!
மிலிந்த் சோமன் மனைவி அங்கிதா கோன்வார் தான் வாழ்க்கையில் அனுபவித்த பல்வேறு கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம், வித்தகன், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து உள்ளவர் மிலிந்த் சோமன். இந்தி நடிகரான இவரின் வயது 55.
மாடலான இவர் மைலேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார்.
இதனையடுத்து அங்கிதா கோன்வார் என்ற பெண்ணை அவரது 18 வயதில் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் 26 வருடம் இடைவெளியில் அங்கிதா கோன்வாரும் - மிலிந்த் சோமனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் அடிக்கடி வெளியே சுற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அங்கிதா - மிலிந்த் ஜோடி சுமார் 26 வருட இடைவெளியில் காதலித்து, திருமணம் செய்து கொண்டதை பலரும், சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அங்கிதா கோன்வார் தான் வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமாக செயல்கள் குறித்த அனுபவத்தை முதல் முறையாக பதிவிட்டு உள்ளார். அந்த பதவில், ”குழந்தையாக இருந்த போதே பல விதமான பாலியல் தொல்லைகளைசந்தித்து இருக்கின்றேன்.
விடுதிகளில் வளர்ந்தேன். வெளிநாட்டு நகரங்களில் தனியாக வாழ்ந்தேன். நான் மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டது இன்னும் வலிக்கிறது. ஒரு சகோதரனை இழந்தேன், முன்னாள் காதலனை இழந்தேன், என் தந்தையை இழந்தேன்.
அவர்களின் பார்வையில் நான் எப்படி தெரிக்கிறோனா அந்த பெயர் வைத்து என்னை அழைத்தனர். நான் நம்பிக்கையுடன் இப்போது இருக்கின்றேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.





















