Meenakshi Ponnunga: கொலை செய்யப்பட்ட சங்கிலி...மீனாட்சி மீது திரும்பும் பழி...மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலி கொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.
முன்னதாக சங்கிலியை சக்தி கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதம் சொன்ன நிலையில், வெற்றியை ஜெயிலுக்கு அனுப்ப புஷ்பா சங்கிலியுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இதனால் வெற்றியை தேடி வரும் போலீசை அடித்ததால், ரங்கநாயகி கைதுசெய்யப்படுகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் ரங்கநாயகி சக்தி தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனே பூஜா வக்கீலோடு வந்து ரங்கநாயகியை ஜாமீனில் எடுக்கிறார். இதற்கிடையில் சங்கிலி கொலை செய்யப்படுகிறார்.
View this post on Instagram
சம்பவ இடத்திற்கு வரும் புஷ்பா, நீதான் என் தம்பியை கொலை செய்தது என்று மீனாட்சியை திட்டி விட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறாள். மேலும் புஷ்பா நீதிமணியை பார்த்து, மீனாட்சி தான் என் தம்பியை கொலை செய்தது என்று தெரிவிக்கிறார். மேலும் சங்கிலியை கொன்னது மீனாட்சி தான் என்று இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புஷ்பா சொல்லுகிறாள்.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புஷ்பாவிடம் புகாரை எழுதி வாங்கிக் கொள்கிறார். இந்த பக்கம் சங்கிலியை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று மீனாட்சி சாந்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது மெஸ்ஸூக்கு போலீஸ் வருகிறது. இதனைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். உள்ளே வந்து அராஜகமாக சோதனை செய்து மீனாட்சி தான் கொலை செய்தது என போலீசார் கூறுகிறார்கள். ஆனால் சாந்தாவும் யமுனாவும் போலீசிடம் மீனாட்சி கொலை செய்யவில்லை என்று கெஞ்சும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.