மேலும் அறிய

பார்வையில் மிரட்டும் அதர்வா: வெளியானது மத்தகம் சீர்ஸ் ஃபர்ஸ்ட் லுக்!

“30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸாக ‘மத்தகம்’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல்  நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான 'மத்தகம்' சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.  Screen Scene Media Entertainment தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். 

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.  இந்நிலையில், இந்தப் படம் பற்றி இயக்குநர் பிரசாத் முருகேசன் படம் குறித்துக் கூறுகையில்..  “30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் “மத்தகம்”. 

ஒரு இரவில் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.  இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த சீரிஸின் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget