Master Mahendran : லவ் யூ சோ மச் அண்ணா.. விஜயை நினைத்து இன்ஸ்டாவில் நெகிழ்ந்த மாஸ்டர் மகேந்திரன்
மகேந்திரம் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜயுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த மாநகரம் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரு இரவில் நடப்பது போல் அமைந்திருந்த கைதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அதன்படி அவர் மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இவரின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார். நாட்டாமை படத்தில் சிறுவனாக அறிமுகமான மகேந்திரன் விஜயுடன் மின்சாரக்கண்ணா படத்திலும் நடித்திருப்பார்.
சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் அவருக்கான வாய்ப்பு சரிவர வழங்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில் அவரின் சினிமா வாழ்வின் திருப்பு முனையாக மாஸ்டர் படம் அமைந்தது. அதில் அவரது மிரட்டலான நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
இந்த நிலையில் மகேந்திரன் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
All the very best @Actor_Mahendran 👏 #HBDMasterMahendran
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 23, 2022
Written & Directed by @Dir_Arunkarthik Cast: @Actor_Mahendran @Noblekjames2 #Maari #Arati @Actorsrini @actorchella @sabadesigns213 @teamaimpr#RIPUPBURY #RIPUPBURYFIRSTLOOK pic.twitter.com/g13adyjp90
இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜயோட கேக் வெட்டிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram