நான் ரெடிதான்.. டான்ஸில் மாஸ்.. போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிராக தானா சேர்ந்த ஈரோடு கூட்டம்
ஈரோட்டில் சாலையில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நான் ரெடிதான் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர்.
விஜய்யின் ’நான் ரெடிதான்’ பாடலுக்கு ஈரோட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, அஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ் காட்டியதால் லியோவிலும் அந்த ஹைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ரிலீசை ஒட்டி ஒவ்வொரு அப்டேட்டாக லியோ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை ஒட்டி லியோ படத்தின் முதல் பாடலாக ‘நான் ரெடி தான்’ பாடல் வெளியானது. அனிரூத் இசையில் விஜய் பாடிய இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடினர். பாடலில் போதைப்பொருளை பயன்படுத்துவது, வன்முறைக்கு ஆதரவாக இருப்பதாக சர்ச்சை கருத்துகள் எழுந்தாலும், நான் ரெடி தான் பாடல் இதுவரை 82 மில்லியன் பார்வையாயளர்களை கடந்துள்ளது.
இந்த நிலையில் ஈரோட்டில் சாலையில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நான் ரெடி தான் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினர். அலைகடலென திரண்ட மக்கள் ஒன்றாக இணைந்து நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
#NaaReady Response From Erode 😳🔥#Leo @actorvijay @Jagadishbliss @7screenstudio @anirudhofficial #FunStreet pic.twitter.com/PYhhBGtuRz
— 𝙊𝙏𝙁𝘾 𝙏𝙬𝙞𝙩𝙩𝙚𝙧 (@OTFC_Team) July 30, 2023
நேற்று ஈரோட்டில் 80 அடி சாலையில் ஃபன் ஸ்ட்ரீட் என்ற தலைப்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. அதில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஈரோடு மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.