Actor Jonathan Majors: முன்னாள் காதலியை தாக்கிய வழக்கில் நடிகர் ஜோனதன் கைது - மார்வெல் எடுத்த அதிரடி முடிவு!
Marvel Drops Actor Jonathan Majors: முன்னாள் காதலியை தாக்கிய நடிகர் ஜோனதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை தங்கள் நிறுவன படங்கள், சீரிஸ்களில் இருந்து விலக்குவதாக மார்வெல் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் ரத்து:
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ்க்கு அவரது முன்னாள் காதலியை தாக்கியதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து மார்வெல் ஸ்டூடியோஸ் (Marvel Studios) மற்றும் வால்ட் டிஸ்னி (Walt Disney Co) நிறுவனங்கள் எதிர்கால திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்ததை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மார்வெல் சீரிஸ் நடிகர்:
ஜோனதன் Ant-Man and the Wasp, Gully Creed iii, Devotion, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் மார்வெல் சீரிஸ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானர். ’kang’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது முன்னாள் காதலி Jabbari, ஜோனதன் மேஜர்ஸ் கழுத்தை நெரித்து தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தார். Jabbari-யை தாக்கியதாவும் அவரது கை விரல்களில் முறிவு ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் ஜபாரி கழுத்தை நெரிக்க முயன்றதாகவும் முதுகு, கழுத்து, காதுகளில் காயம் ஏற்பட்டது என்றும் புகார் அளித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் ஜோனதன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. Manhattan District Attorney Alvin Bragg அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளார். இருவருக்கும் டாக்ஸியில் வாக்குவாதம் நடந்தது. அதன் விளைவாக வீடு வந்ததும் அவர் என்னைத் தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ள ஜபாரியின் புகார் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜோனதன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தண்டனை குறித்து பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.