Manjal Veeran : ”தரித்திரம் டூ சரித்திரம்” புதிய மஞ்சள் வீரன் யார்? செல் அம் கொடுத்த அப்டேட்
Manjal Veeran : ஜனவரி 13, போகி பண்டிகையன்று காலை 10 மணிக்கு மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ மற்றும் புதிய லுக்கை வெளியிடப்படும் என இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்
மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ யார் என்பதை விரைவில் அறிவிப்பதாக இயக்குனர் செல்அம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
டிடிஎஃப் வாசன்:
யூடியூபரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவரான டிடிஎஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தை இயக்குவதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருந்தார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக செல்அம் அறிவித்தார்.
இதையும் படிங்க: " உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
டிடிஎஃப் வாசன் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பை தொடங்க ஒத்துழைக்கவில்லை போன்ற காரணங்களால் படத்தை விட்டு நீக்குவதாக செல் அம் விளமளித்தார். இதனால் டிடிஎஃப் வாசன் மற்றும் செல் அம் இடையே மாறி மாறி ட்ரோல் செய்த சம்பவங்களும் நடைப்பெற்றது
கூல் சுரேஷ்:
இதனையடுத்து செல் அம் நடிகர் கூல் சுரேஷை வைத்து மஞ்சள் வீரன் படத்தை எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகன் இல்லை என்றும் மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் பற்றிய அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சினிமாவை விட்டு விலக முடிவு செய்த சிவகார்த்திகேயன்..மனைவி ஆர்த்தி கொடுத்த தைரியம்
புதிய வீடியோ:
இந்த நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய நாயகன் யார் என்பதை வருகிற ஜனவரி 13 ஆம் தேதி அறிவிப்பதாக இயக்குனர் செல் அம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
https://x.com/itzSekar/status/1876229268239421486?t=8F5Fp9-E_GYFBnt9EOImBw&s=08
இது குறித்து செல் அம் வெளியிட்டுள்ள வீடியோவில் ”வருகிற ஜனவரி 13, போகி பண்டிகையன்று காலை 10 மணிக்கு மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ மற்றும் புதிய லுக்கை வெளியிடப்படும். மேலும் பழையன கழிதல் புகுதல், தரித்திரத்தில் இருந்து விடுப்பட்டு இனி சரித்திரத்தை நோக்கி மஞ்சள்வீரன்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவே செல் அம் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எற்கெனவே இவரது முதல் படமான திரு.வி.க பூங்கா திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.