2025-ல் இரண்டு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணமா?

Published by: ABP NADU

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வால் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்னும் சில அதிசியங்களை அறிந்துகொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிகழ்வை சில இடங்களில் வெறும் கண்களால் காணமுடியும் சில இடங்களில் காண இயலாது. இந்தியாவில் சில கிரகணங்களை காணமுடியாது எனக் கூறப்படுகிறது.

சந்திர கிரகணம்

மார்ச் 14-ல் 10.39 AM IST முதல் 2.19 PM IST வரை 2025-ன் முதல் முழு சந்திர கிரணம் நடக்கவுள்ளது. வட அமேரிக்காவில் காணப்படும். பகல் நேரம் என்பதால் இந்தியாவில் காண இயலாது.

செப்டம்பர் மாதம் 7-8-ல் 9.56 PM முதல் IST 1.26 AM IST வரை இரண்டாவது முழு சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. இந்தியாவிலும், ஆசியாவில் சில பகுதிகளிலும் காணப்படும்.

சூரிய கிரகணம்

மார்ச் 29-ல் 2.20 PM IST முதல் 6.20 PM IST வரை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடக்கவுள்ளது. வட அமேரிக்காவில் பகுதி கிரகணத்தை காணமுடியும். இந்தியாவில் காண இயலாது.

செப்டம்பர் 21-22-ல் இரண்டாவது சூரிய கிரகணம் 10.59 PM IST முதல் 03.23 AM IST வரை நடக்கவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தையும் இந்தியாவில் காண இயலாது. நியூசிலாந்தில் பகுதி சூரிய கிரகணத்தை காணலாம்.