19YearsOf Ayutha ezhuthu: 19 ஆண்டுகள்: ரசிகர்களால் கொண்டாடப்படாத காவியம் ஆயுத எழுத்து!
மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இந்தப் படத்தை ஒரு ரிவிசிட் செய்யலாம்
கடந்த 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தப் படம் ஆயுத எழுத்து. இன்று பரவலாக ஆயுத எழுத்துப் படம் ரசிக்கப் பட்டாலும் ஆயுத எழுத்து மணிரத்னத்தின் தோல்வியை சந்தித்தப் படங்களில் ஒன்று.இன்று அந்தப் படம் வெளியாகி பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன.ஆயுத எழுத்துப் திரைப்படம் ஏன் அதிகம் வரவேற்கப் பட்டிருக்க வேண்டிய ஒரு படம் என்று பார்க்கலாம்.
கதை சொல்லல் முறை
ஆயுத எழுத்து திரைப்படத்தின் கதை சொல்லல் முறை மிக சுவாரஸ்யமான ஒரு முறை. இன்று பல திரைப்படங்கள் இந்த முறையில் வெளிவருகின்றன. ஆனால் 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இதை முயற்சித்து வந்திருக்கிறார். மொத்தம் மூன்று கதாபாத்திரங்கள் சூர்யா, சித்தார்த், மாதவன். இந்த மூன்று கதாபாத்திரங்களின் கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டு பின் மூவரின் வாழ்க்கையும் இணைகின்றன.
ஆயுத எழுத்துத் திரைப்படம் இனாரிட்டூவின் அமரோஸ் பெரோஸ் திரைக்கதை வடிவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு முயற்சி.
மூன்று காதல்கள்
ஆயுத எழுத்து திரைப்படத்தில் மொத்தம் மூன்று காதல் கதைகள் இடம்பெறுகின்றன. முதலில் த்ரிஷா மற்றும் சித்தார்த்துக்கு இடையிலான காதல். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணான மீரா (த்ரிஷா) அமெரிக்கா செல்ல துடிக்கும் அர்ஜுனை (சித்தார்த்தை) சந்திக்கிறார். இருவரும் விளையாட்டாக தொடங்கி மீராவின் மேல் காதல் வயப்படுகிறார் அர்ஜுன்.
மற்றொரு பக்கம் மைக்கேல் ராதிகா ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் ஒரு லட்சியவாதியாக இருக்கும் மைக்கலை அவரை அப்படியே ஏற்றுகொள்ளும் ராதிகா.
இன்பா மற்றும் சரிக்கு இடையிலான காதல் தான் முந்தைய இரண்டு காதல்களை விட அதிக அர்த்தம் பெறும் ஒரு காதல். இன்பா மற்றும் சசி திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்பா ஒரு ரவுடியாக இருக்கிறான். அவனை இந்தத் தொழிலை விடச்சொல்லிக் கேட்டுகொள்கிறார் சசி. இதற்காக இருவருக்கு இடையில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்கின்றன. ஒரு உயிரை கொல்வதற்கான வலியை இன்பாவிற்கு உணர்த்த தனது சொந்தக் குழந்தையை கலைக்கிறார் சசி. இந்தக் காட்சியில் மாதவனின் நடிப்பு அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்று.
பாடல்கள்
ஆயுத எழுத்துப் படம் வெற்றிபெறவில்லை என்றாலும் ரஹ்மான் இசையில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. யாக்கைத் திரி, சண்டகோழி, நெஞ்சமெல்லாம் காதல், ஜன கன மன, குட் பை நண்பா என அத்தனைப் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன.
ஆயுத எழுத்து திரைப்படத்தின் மையக்கதை அரசியலில் இளம் தலைமுறியினரின் அவசியம். அன்றைய தேதியில் வைத்துப் பார்த்தால் மிக பரவலான ஒரு லட்சியக் கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டிருக்கிறது. ஆனால் மணிரத்னத்தின் திரைக்கதை மிளிர்ந்த இடங்கள் இந்த படத்தில் இருக்கின்றன.