அச்சச்சோ...கார் விபத்தில் சிக்கிய மணிமேகலை.. என்னதான் ஆச்சி?
தொகுப்பாளினி மணிமேகலை கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நுழைந்து உள்ளார். முதலில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பின்பு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அச்சச்சோ...கார் விபத்தில் சிக்கிய மணிமேகலை.. என்னதான் ஆச்சி?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவருடன் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
இவர் ஹுசைன் மணிமேகலை என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். குறிப்பாக அந்த சேனலில் ஊரடங்கு காலத்தில் கிராமத்துக்குள் சிக்கிக்கொண்ட இவர்கள் அங்கு வழக்கமாக செய்யும் நடவடிக்கைகளை வேடிக்கை கலந்த பணியில் வீடியோவாக வெளியிட்டனர். இந்த ஜோடி சமீபத்தில் கடந்து சென்ற விநாயகர் சதுர்த்தி நாளன்று BMW காரை வாங்கினார் . அன்று இருவரும் கார் வாங்கிய ஃபோட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தனர்.
புதிதான பொருள் வந்தாலும் பழைய பொருள்களை மற்றக்காத மணிமேகலை
தனது பழைய காரில் ஹுசைனுடன் 2 நாட்களுக்கு முன்னர் வெளியே சென்றார்.
இரவில் நேரத்தில் லாங் டிரைவ் சென்ற மணிமேகலை காரை அவரே ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களின் கார், லாரி மீது இடித்து விபத்து குள்ளாகியது.
இதுநூலிழையில் உயிர் பிழைத்தாக மணிமேகலை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய மணிமேகலை, ஜஸ்ட் மிஸ்ஸில் இருவரும் உயிர் தப்பினோம். என்று அந்த விபத்து குறித்த வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்
இது குறித்த வீடீயோவை மணிமேகலை அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், “2017 ஆம் ஆண்டு விபத்து நடந்தவுடன் எனக்கு திருமணம் ஆனது. இப்போ மீண்டும் விபத்து நேர்ந்துள்ளது. எனக்கு 2021 ஆம் ஆண்டு முழுவதுமே சோதனையாக இருக்கிறது. இந்த ஆண்டு தான் காலில் சுடுத் தண்ணீரை காலில் ஊற்றி விட்டு வீட்டில் ஓய்வு எடுத்தேன்.
இந்த ஆண்டு ராசியே இல்லை. 2022 பிறந்த உடன் நான் அதனை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்” என பேசி உள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் பார்த்து ஜாக்கிரத்தையாக இருக்க மணிமேகலை. நீங்கள் எங்களுக்கு முக்கியம் என தெரிவித்தனர்.
திருமணமாகுவதற்கு முன்பாக மணிமேகலை, ஹைதராபாத்தில் இருந்த ஹுசனை சென்னையில் இருந்து கார் ஓட்டிச்சென்று பார்த்த்விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது தனக்கு தற்போது தான் இது போன்ற சம்பவம் நடந்தது என உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.